நரம்புத் தசை நோய் கொண்ட மக்களில் கணுக்கால் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் சிகிச்சை தலையீடுகள்

நரம்புத்தசை நோய் உள்ள மக்களில், கணுக்கால் நெகிழ்வுத்தன்மை ஒரு பொதுவான பிரச்சனையாகும். அது பாத குறைபாடு, வலி ​​மற்றும் நடை பிரச்சினைகளை ஏற்படுத்தும். நரம்புத் தசை நோய் கொண்ட மக்களில் கணுக்கால் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் சிகிச்சை தலையீடுகளின் திறன் சம்பந்தமான ஆதாரங்களை மதிப்பிடுவதற்காக இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. மொத்தமாக 149 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட நான்கு ஆய்வுகள் இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு ஆய்வுகள், சார்கட்-மரி-டூத் நோய் வகை 1A –யைக் கொண்டிருந்த 26 பேரின் கணுக்கால் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதில், ஒரு இரவு சிம்புக்கட்டுவை அணிவதை ஒரு இரவு சிம்புக்கட்டுவை அணியாமல் இருப்பதை விட பயனுள்ளது அல்ல என்று காட்டியது. டியுசென் தசைநார் தேய்வு நோய் கொண்ட 103 சிறுவர்களின் கணுக்கால் நெகிழ்வுத்தன்மையை கார்டிகோஸ்டீராய்டு (பிரெட்னிசோன்) கணிசமாக மேம்படுத்த வில்லை என்று ஒரு ஆய்வு காட்டியது, மற்றும் மற்றொறு ஆய்வு, எலும்பியல் அறுவைசிகிச்சை டியுசென் தசைநார்த் தேய்வு உள்ள 20 இளம் சிறுவர்களின் கணுக்கால் நெகிழ்வுத்தன்மையை ஆரம்பத்தில் அதிகரித்த போதிலும் நீண்ட காலத்திற்கு நிலைநிற்க வில்லை என்று காட்டியது. தற்போது, சார்கட்-மரி-டூத் நோய் வகை 1A மற்றும் டியுசென் தசைநார்த் தேய்வு நோயாளிகளுக்கு கணுக்கால் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் எந்த சிகிச்சை தலையீட்டையும் ஆதரிப்பதற்கு மிகக் குறைவான ஆதாரம் உள்ளது என்று இந்த திறனாய்வு காட்டுகிறது. அதிகப்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information