ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துதல்

தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்கள் என்பது எலக்ட்ரானிக் முறையில் தகவலை சேர்த்து, நடைமுறைப்படுத்தி மற்றும் பகிர்வதற்கு உதவும் தொழில் நுட்பங்கள் ஆகும். எலக்ட்ரானிக் மருத்துவ குறிப்பேடுகள், மருத்துவ ஆராய்ச்சி நூல்கள், மற்றும் இணைய தரவுத்தளங்கள், மருத்துவர் அமர்வுகளுக்கு வீடியோ-கான்பரன்சிங், அல்லது பராமரிப்பை மேலும் மேம்படுத்துவதற்கு மருத்துவர்களுக்கு பின்னூட்டு அளிக்கும் இணைய அமைப்புகள் போன்றவை இதற்கு சில உதாரணங்களாகும். நோயாளிகளின் ஆரோக்கிய பராமரிப்பை மேம்படுத்துவதற்கு தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்களுக்கு ஆற்றல் உண்டு. அதிக அதிகமான மருத்துவமனைகளில் கணினி பயன்படுத்தப்பட்டாலும், எல்லா ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்களும் தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில்லை.இந்த காரணத்திற்காக, தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை மேம்படுத்த பல யுக்திகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்த ஆரோக்கிய வல்லுநர் குழுக்களுக்கு பயிற்சியளிப்பது, அல்லது ஒருவருக்கு மாத்திரம் பயிற்சியளிப்பது அல்லது வெறும் பயிற்சி குறிப்புகளை மட்டும் அளிப்பது போன்றவை சில யுக்திகளாகும்.

தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை மேம்படுத்துவதற்கான வெவ்வேறு விதமான யுக்திகளின் விளைவுகளை ஆராய்வதற்கு இந்த திறனாய்வு நடத்தப்பட்டது. தொடர்புடைய ஆய்வுகளை தேடிய பிறகு, 10 ஆய்வுகள் அடையாளம் காணப்பட்டன. குழு-பயிற்சிகள், அல்லது ஒருவருக்கான பயிற்சி அமர்வுகள் அல்லது பயிற்சி திட்டங்கள் மற்றும் குறிப்புகளை அளித்தல் போன்ற சில வழிகள் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை மேம்படுத்தக் கூடும் என்பதை ஆதாரம் காட்டுகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக, சில வழிகள் திறன் மிக்கதாக இருக்குமா என்பது நிச்சயமாக தெரியவில்லை. அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information