நடமாட்டம் குறைகளுடன் உள்ள நாள்பட்ட பக்கவாதம் நோயாளிகளுக்கு நடபதற்கான நில மடத்தில் இயன்முறை சிகிச்சை

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 700000 ஆகும். பக்கவாத பாதிப்பைக் கடந்து வாழும் மூன்றில் இரண்டு பேர் பக்கவாதம் பாதிக்கப்பட்ட உடனே நடக்க சிரமப்படுகின்றனர். பாதிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்தவர்களில் 30%பேர்களுக்கு நடக்க உதவும் பொறி இன்றி நடக்க இயலவில்லை. நாள் பட்ட பக்கவாத நோயாளிகளுக்குத் தரப்படும் சம தள நடை பயிற்சி இயன்முறை சிகிச்சையில் முக்கியமானதாகும். இப்பயிற்சி இயல்பான நடையைப் பெறுவதையே நோக்கமாக கொண்டு செய்யப்படுகிறது. இந்த பயிற்சிகளின் போது இயன்முறை பயிற்சியாளர் நோயாளிகள் நடக்கும் முறையை உற்று நோக்கி சரியான முறையை நினைவூட்டி பயிற்சி அளிப்பர். இதற்குத் தேவையான சாதாரண உடற்பயிற்சிகள் தரப்படும் (இதற்கு உயர்வான தொழிநுட்ப கருவிகள் தேவையில்லை). நாங்கள் 499 நோயாளிகள் பங்குபெற்ற 9 ஆய்வுகளை மறுசீராய்வு செய்து சம தள நடை பயிற்சி எவ்வாறு நடைஇயக்க அளவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தோம். 269 பேர்கள் பங்குகொண்ட 3 ஆய்வுகளின் அடிப்படையை ஆராய்ந்தால் இப்பயிற்சி பலன் அளிக்கத்தக்கது என்று கூற எந்த ஆதாரமும் இல்லை. 369 பாதிக்கப்பட்டவர்கள் பங்குபெற்ற 7 ஆய்வுகள் நடையின் வேகம் 0.07 மீ /வினாடி உயர்ந்துள்ளது என்று கூறுகின்றன. 181 பேர் பங்குபெற்ற 4 ஆய்வுகளின் அடிப்படையில் நோயாளிகளை நாற்காலியில் இருந்து எழுந்து 3 மீட்டர் நடந்து திரும்பி வந்து உட்காரும் நேரத்தை அளக்கும் சோதனையில்(Timed up and go Test) நேர அளவு 1.81 வினாடிகள் மேம்பட்டுள்ளது. மற்றும் 6 நிமிட நடக்கும் பரிசோதனையில் ( 6 Minute walk Test) 26.06 மீட்டர் அதிகரித்துள்ளது. இப்பயிற்சியின் 3 மாத காலத்துக்குப்பின் தொடர் விளைவுகளைப் பற்றிய ஆய்வுக்குறிப்புகள் சிலவே உள்ளன. பயிற்சி பெற்றவர்கள் பெறாதவர்கள் இடையே இறப்பு,உடல் ஊனம் மற்றும் எதிர் விளைவுகள் போன்றவற்றில் எந்த குறிப்பிட்டு கூற கூடிய வித்தியாசமும் இல்லை. சமதள நடைபயிற்சி நாள்பட்ட பக்கவாத நோயாளிகளின் நடையை மேம்படுத்த உதவுகிறது என்று கூற தேவையான ஆதாரங்கள் எங்களிடம் குறைவாகவே உள்ளது. சமீபத்திய ஆய்வுகள் இந்த பயிற்சி நடையின் வேகம், 6 நிமிடம் நடக்கும் தூரம் போன்ற அளவீடுகளில் சிறிய கால பயன்களை ஏற்படுத்துவதாக கூறுகின்றன. இந்த திறனாய்வில் குறைபாடுகளாக கருதப்படுபவை - பக்கவாதத்தால் அதிகமான உடல் ஊனங்கள் ஏற்படுதல்,மெதுவாக பக்கவாதத்திலிருந்து குணமடைதல், சமுதாய இயன்முறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் ஆராய்ச்சியைப் பற்றிய முழுமைஅடையாத தகவல்கள்,பயிற்சியால் ஏற்படும் அடிப்படை மாறுபாடுகள் பற்றிய தகவலின்மை,தொடர் விளைவுகளை 3 மாதத்திற்குமேல் ஆராயாதது,பயிற்சி விளைவுகளை ஆராய பலவிதமான அளவு கோல்கள் பயன்படுத்தியது. சமதள நடைபயிற்சி இயன்முறை சிகிச்சை பக்கவாத நோயாளிகளின் மீதுள்ள தாக்கத்தைத் தெளிவாக அறிய கூடுதல் தரமான சமவாய்ப்பு கட்டுபடுத்தபட்ட சோதனைகள் தேவைபடுகின்றன .

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஹரிகணேஷ் மற்றும் சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information