பிள்ளை பேற்றுக்கு பின் அதிக எடை கூடிய பெண்களில், உடல் எடையைக் குறைப்பதற்கான உணவு முறை அல்லது உடற்பயிற்சி அல்லது இரண்டும்

பெண்கள், கர்ப்பக் காலத்தில் இயற்கையாகவே உடல் எடை கூடுவர், மற்றும் அநேகர் அதன் பின், படிப்படியாக எடையிழப்பர். எனினும், சில பெண்கள், பிள்ளை பேற்றிற்கு தொடர்ந்த முதல் அல்லது இரண்டு வருடங்களில் கூடிய எடையை குறைப்பதற்கு சிரமப்படுவர், மற்றும் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு அபாயமாக ஆகக் கூடும் என்பதை பற்றி அக்கறை கொள்ள வேண்டியிருக்கிறது. கர்ப்பக் காலத்தின் போது கூடிய எடை தக்க வைக்கப்படும் போது , அது உடற் பருமனிற்கு பங்களிக்க கூடும், இது நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்க கூடும். ஆறு மாதங்களில், கர்ப்பக் காலத்தின் முந்தைய உடல் எடைக்கு திரும்பும் பெண்கள், பத்து வருடங்கள் கழித்து உடல் எடை அதிகரிப்பின் குறைந்தளவு அபாயத்தைக் கொண்டிருப்பர் என்று பரிந்துரைக்கப்படுகிறது. பிள்ளை பேற்றுக்கு பின் வரும் மாதங்களில், பெண்களின் உடல் எடை குறைப்பின் மேல் உணவுமுறை அல்லது உடற்பயிற்சி அல்லது இரண்டின் விளைவுகளின் தாக்கத்தை பற்றி ஆராய இந்த திறனாய்வு, சீரற்ற சோதனைகளை கண்டது. இது, தாய் பாலூட்டும் பெண்கள், பாலூட்டுவதை விட்டு விடாமல் இருப்பதை பற்றிய நிச்சயத்தில் வெகுவாக கவனத்தை செலுத்தியது. பிள்ளை பேற்றுக்கு பின் அதிக எடை கூடிய 910 பெண்களைக் கொண்ட, பகுப்பாய்விற்கு தரவை பங்களித்த 12 ஆய்வுகள் உள்ளடங்கிய, 14 ஆய்வுகளை இந்த மருத்துவ சோதனைகளின் திறனாய்வு கண்டது. வழக்கமான பராமரிப்போடு ஒப்பிட்ட போது, உணவு முறையோடு சேர்க்கப்பட்ட உடற்பயிற்சி அல்லது உணவுமுறை மட்டும், பிள்ளை பேற்றுக்கு பின், உடல் எடையைக் குறைப்பதிற்கு உதவின என்று கண்டுப்பிடிப்புகள் பரிந்துரைக்கின்றன. எதிர்கால தாய்மைக்குரிய உடற்பருமனை தடுப்பதில், இந்த சிகிச்சை தலையீடுகள் பங்களிப்பதில் ஆற்றல் உடையவையாகும். சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளில் இல்லாவிடினும், உடற்பயிற்சி அல்லது உணவுமுறை தாய் பாலூட்டுதலுடன் குறிக்கிடவில்லை என்று உறுதியாக கூற போதுமான ஆதாரம் இல்லை. உணவுமுறையோடு மட்டும் ஒப்பிடுகையில், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி கூட்டாண்மையின் மூலம் எடையை குறைப்பது விரும்பத் தக்கதாய் உள்ளது, ஏனென்றால்,உடற்பயிற்சியானது, இரத்த ஓட்டத்தை அதிகரித்து மற்றும் இதய திறனை மேம்படுத்துகிறது, மற்றும் கொழுப்பற்ற உடற் நிறையை பாதுகாக்கிறது. எதிர்கால ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information