டுச்சென் தசை வளக்கேடு (டுச்சென் மஸ்குலர் டிஸ்ட்ரோபி) கொண்ட நோயாளிகளில் முதுகெலும்பு வளைவிற்கான அறுவை சிகிச்சை

திறனாய்வு கேள்வி

டுச்சென் மஸ்குலர் டிஸ்ட்ரோபி (டிஎம்டி) கொண்ட நோயாளிகளில் ஸ்கோலியோசிசை குணப்படுத்துவதற்கான முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் திறன் மற்றும் பாதுகாப்பு என்ன?

பின்புலம்

டிஎம்டி கொண்ட நோயாளிகளில், ஸ்கோலியோசிஸ் அல்லது முதுகெலும்பு வளைவு பொதுவானதாகும். அது பெரும்பாலும் தீவிரமடையக் கூடியது. அதன் தீவிரத்தை நிறுத்தவும், ஒப்பனை தோற்றத்தை மேம்படுத்தவும், பராமரிப்பை தூண்டவும், கரம் மற்றும் சுவாச செயல்பாட்டை பாதுகாக்கவும், மற்றும் நம்பிக்கையோடு உயிர் வாழ்தலை நீடிக்கவும், அறுவை சிகிச்சை அதிகமாக செய்யப்படுகிறது. பிற மாற்று வழிகளைக் காட்டிலும், அறுவை சிகிச்சை சிறப்பானதா அல்லது மோசமானதா என்பதை அறிய நாங்கள் விரும்பினோம்.

ஆய்வு பண்புகள்

எந்த சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளையும் நாங்கள் காணவில்லை.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றின் தரம்

49 தொடர்புடைய ஆய்வுகளை நாங்கள் கண்டோம், எனினும், அவைகள் மருத்துவ சோதனைகள் அல்லாது தொலை நோக்குள்ள அல்லது பின்நோக்கிய நோயாளி நிலை தொடர்களின் திறனாய்வுகளாக இருந்தன. எந்த மருத்துவ சோதனையும் இல்லாததால், சான்றின் தரம் மிகவும் குறைவாக இருந்தது. இது ஒரு மேம்பட்ட திறனாய்வு ஆகும், இதில் ஒரு மேம்பட்ட தேடுதல் நடத்தப்பட்டு எந்த புதிய ஆய்வுகளும் காணப்படவில்லை.

முடிவுரை

டிஎம்டி கொண்ட நோயாளிகளில் ஸ்கோலியோசிஸ் அறுவை சிகிச்சையின் திறனை ஆராய்ந்த எந்த சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளும் இருக்கவில்லை. இந்த நோயாளிகள் குழுவில், வெவ்வேறு அறுவை சிகிச்சைகளின் பழங்கள் மற்றும் இடர்கள் பற்றி சோதனை செய்வதற்கு சீரற்ற கட்டுப்பாட்டு மருத்துவ சோதனைகள் தேவைப்படுகின்றன

இந்த ஆதாரம், 5 ஜனவரி 2015 வரை தற்போதையது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய்,ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information