ஹாதோர்ன் சாரத்தை, நாள்பட்ட இதய செயலிழப்பின் ஒரு வாய்வழி சிகிச்சை தேர்வாக பயன்படுத்தலாம் .

ஹாதோர்ன் சாரம் (ஹாதோர்ன் புதரின் காய்ந்த இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டது), நாள்பட்ட இதய செயலிழப்பின் ஒரு வாய்வழி சிகிச்சை தேர்வாக பயன்படுத்தலாம். இந்த திறனாய்வில், 14 இருமுனை-மறைக்கப்பட்ட, போலியாக கட்டுப்படுத்தப்பட்ட சீரற்ற மருத்துவ சோதனைகள் கண்டறியப்பட்டது. அவை அனைத்தும் ஒரே விளைவுகளை அளவிடவில்லை மற்றும் அநேக ஆய்வுகள், நோயாளிகள் வேறு எந்த இதய செயலிழப்பு சிகிச்சைகளை பெற்றனர் என்பதை விளக்கவில்லை. மெட்டா-பகுப்பாய்வில் சேர்க்கத் தக்க சோதனைகள், இதய செயலிழப்பு அறிகுறிகள் மற்றும் இதய செயல்பாடு ஆகியவற்றில் மேம்பாடுகளைக் காட்டின. ஆதலால், நாள்பட்ட இதய செயலிழப்பின் பாரம்பரியமான சிகிச்சைகளுடன் கூடுதலாக, ஹாதோர்ன் சாரத்தால் நன்மை ஏற்படுகிறது என்று முடிவுகள் பரிந்துரைக்கின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information