கழுத்து வலிக்கான நோயாளி விளக்கக் கல்வி

முடுக்கம்-எதிர்முடுக்கம் சார்ந்த கோளாறுகள் (Whiplash–associated disorders, WAD), மற்றும் எளிய இயந்திர இயக்கம் சார்ந்த கழுத்து வலி போன்ற கழுத்து கோளாறுகள் பொதுவானவை, மற்றும் பெரும்பாலும் தானாக குணமடையக் கூடியவை. ஆனால், அவை இயலாமையை ஏற்படுத்துவதோடு உதவியை நாடும் நோயாளிகளில் சிறு பகுதியினருக்கு பெருஞ்செலவாகும். கழுத்து கோளாறுகளுடன் தொடர்புடைய நேரடி மருத்துவ செலவுகளில் ஒரு பெரும் பகுதியானது, மருத்துவ பராமரிப்பு அளிப்போரை சந்தித்தல், மருத்துவ விடுப்பு மற்றும் உற்பத்தி திறனுடன் தொடர்புடைய இழப்பு ஆகியவை நிமித்தமாக ஏற்படுகிறது.

கழுத்து வலி சிகிச்சையின் போது ஆலோசனை மற்றும் விளக்கக் கல்வி ஆகியவை பொதுவாக அளிக்கப்படுகிறது.மிகவும் பொதுவான கல்வி அணுகுமுறைகளில், அறிவுரை (செயலாக்கம், வலி, மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன், பணிச் சூழலியல், சுய-பராமரிப்பு உத்திகள் ஆகியவற்றின் மேல் கவனம் செலுத்தப்படுபவை), கழுத்து வலி பயிலகம், அல்லது கல்வியுடன் கூடிய பிற சிகிச்சைகள் ஆகியவை அடங்கும்.

ஜூலை 11, 2010 வரையிலான மின்னணு ஆதார பட்டியல்களின் தரவுத்தளங்கள் தேடப்பட்டன. கழுத்து கோளாறுகளுக்கான நோயாளி விளக்கக் கல்வி உத்திகளின் விளைவுகளை ஆராய்ந்த பதினைந்து சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் (1660 பங்கேற்பாளர்கள்) சேர்க்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 15 சோதனைகளில், ஒரே ஒரு சோதனை மட்டும் கடுமையான முடுக்கம்-எதிர்முடுக்கம் சார்ந்த குறைபாடுகளுக்கான (WAD), கல்வி கண்ணொளியை மிதமான தரச் சான்றுடன் சித்தரித்திருந்தது. மீதமுள்ள சோதனைகள், நோயாளிக் கல்வி சோதனைகளின் நன்மைக்கான ஆதாரத்தை நிருபித்துக் காட்டவோ அல்லது வலிக்கான ஒப்பீட்டு சிகிச்சையான உடற்பயிற்சியை ஆதரிக்கவோ இல்லை என்று காட்டியது. பிற விளைவுகள் குறைந்தளவிலே அறிவிக்கப்பட்டது மற்றும் வலி தொடர்புடையவற்றலிருந்து பிரிந்து வந்த எந்த முடிவுகளையும் அவை அளிக்கவில்லை. எந்த சிகிச்சையும் பெறாதவர்கள் மற்றும் ஓய்வு, உடற்பயிற்சி, இயன்முறை மருத்துவம் மற்றும் புலனறிந்து நடத்தல் போன்ற சிகிச்சைகளை பெற்றவர்கள் ஆகியவர்களுடன் ஒப்பிடும் போது, சுறுசுறுப்பாக இயங்க ஆலோசனை பெற்ற பங்கேற்பாளர்கள், வலியில் சிறிய அல்லது எந்த வேறுபாடும் இல்லை என்று அறிக்கையிட்டனர். கூடுதலாக, மன-அழுத்தம் மேலாண்மை சிகிச்சைகளை சிகிச்சையின்மையுடன் ஒப்பிடுகையில், இயந்திர இயக்கம் சார்ந்த கழுத்து வலி கொண்ட நோயாளிகளின் வலி தீவிரத்தின் மேல் எந்த விளைவையும் அவை ஏற்படுத்தவில்லை. இறுதியாக, சுய-பராமரிப்பு உத்திகளை (பணிச் சூழலியல், உடற்பயிற்சி, சுய-பராமரிப்பு, தளர்த்தல்) சிகிச்சையின்மையுடன் ஒப்பிடுகையில், வலியின் மேல் எந்த விளைவும் இல்லை.

தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் எதுவும் சோதனைகளில் அறிவிக்கப்படவில்லை.

சுருக்கமாக, பல்வேறு கழுத்து கோளாறுகளுக்கு அளிக்கப்படும் கல்வி தலையீடுகளின் பயன்களுக்கு எந்த வலுவான ஆதாரமுமில்லை என்று திறனாய்வு ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information