பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட உடல் இயக்கம் நலம் பெறுவதற்க்காக இ.எம்.ஜி(EMG) உயிரியல் பின்னூட்டு சிகிச்சை முறை 

தசை மின்னலை வரவி உயிரியல் பின்னூட்டு சிகிச்சை முறை (EMG-BFB), அதாவது ஒளி அல்லது ஒலி சமிக்கை கொண்டு தசை செயல்பாட்டு கண்காணிப்பு உத்திகள் உள்ளடக்கிய (EMG-BFB), பக்கவாத நலம் பெறுதலில் உறுதியற்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தசை மின்னலை வரவி உயிரியல் பின்னூட்டி(EMG-BFB)செயல்பாடானது , நோயாளியின் தசை செயல்பாட்டை தசை மேல்வைத்த மின்முனை மூலமாக அறிந்து, அதனை பின்னூட்டு சமிக்ஞையாக (ஒலி அல்லது ஒளி சமிக்ஞை) உருவாக்குவதாகும். இந்த சிகிச்சை முறை நோயாளிகள் தங்கள் முடமான அவயங்களை மிகவும் பயனுள்ள வழியில் திறம்பட உபயோகிக்க கற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. இ.எம்.ஜி உயிரியல் பின்னூட்டு சிகிச்சையை வழக்கமான இயன்முறை சிகிச்சையுடன் சேர்த்து அளிக்கும்போது பயன் தரும் என்பதற்கு சில ஆதாரங்ககள் உள்ளதாக கண்டறியப்பட்ட 13 ஆய்வறிக்கைகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இ.எம்.ஜி (EMG) உயிரியல் பின்னூட்டை வழக்கமான சிகிச்சை முறையாக பரிந்துரைக்க இயலாது. ஏனெனில், மற்ற ஆராய்ச்சிகள் இந்த சிகிச்சைக்கு எந்த பயனும் இல்லை என கண்டறிந்துள்ளது மற்றும் சாதகமான பயன்களை கண்ட ஆராய்ச்சிகள் சிறிய அளவில் உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: க. ஹரிஓம், வை. பிரகாஷ், ஜெ.சரவண்குமார் மற்றும் சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information