முழங்கால் கீல்வாதத்திற்கான வெப்பம் கொண்டு நோய் நீக்கும் முறை

இந்த கேள்விக்கு விடையளிக்க, விஞ்ஞானிகள் 3 ஆய்வுகளை கண்டறிந்து பகுப்பாய்வு செய்தனர். இந்த ஆய்வுகளில் தங்கள் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டே சூடான, குளிர்ந்த அல்லது ஐஸ்க்கட்டி தொகுப்புகள் / துவலைகளை மசாஜ்டன் அல்லது மசாஜ் இல்லாமல் அல்லது எந்த சிகிச்சையும் இல்லாது பயன்படுத்தினர். இதில் ஆய்வுகள் உயர்ந்த தரமில்லாமல் இருந்த போதிலும், இந்த காக்குரேன் ஆய்வுரை இன்றைக்கு திறனாய்வு இன்றைய நிலையில் எங்களிடம் உள்ள சிறந்த ஆதாரமாகும்.

வெப்பசிகிச்ச முறைகள் என்றால் என்ன, அவை முழங்கால் கீல்வாதத்திற்கு எவ்வாறு உதவும்?
கீல்வாதம் என்பது, கைகள், இடுப்பு, தோள்கள் மற்றும் முழங்கால்களை பாதிக்கும் மிகவும் பொதுவான வாத வடிவம் ஆகும். இந்த மூட்டுவாதத்தில் மூட்டு அமைப்பில் ஈடுபடும் எலும்புகளின் முனைகளை பாதுகாக்க முனைகளின் மீது அமைந்துள்ள குருத்தெலும்பு (Cartilage) சேதமடைந்து வலி மற்றும் வீக்கத்தை உண்டுபண்ணுகின்றன. கீல் வாதம் அறிகுறிகளைக் மூட்டுகளில் குறைப்பதற்கு வெப்பம் அல்லது குளிர்ச்சி வெப்பசிகிச்சை முறைகள் பயன்படுத்தப் படுகிறது. இவை தொகுப்புகள், துவலை, மெழுகு முதலியவற்றால் செய்யப்படுகின்றன. வெப்பம், தசைகளின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தல் மற்றும் தசை தளர்ச்சி முலம் வேலை செய்யலாம். உணர்ச்சியற்ற தன்மையை உண்டுபண்ணி வலியைக் குறைத்தல், வீக்கத்தை குறைத்தல், இரத்த நாளங்களை குறுக்குதல் மற்றும் மூட் டுக்கு செல்லும் நரம்பு சமிக்ஞைகளைத் தடுத்தல் போன்றவற்றின் மூலம் குளிர் வேலை செய்யலாம். புனர்வாழ்வு சிகிச்சை திட்டங்கள் மற்றும் வீடுகளில் இருந்த வண்ணமே வெப்பசிகிச்சை முறைகளை உபயோகப் படுதலாம்.

வெப்பசிகிச்ச முறைகள் எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது?
வாரத்திற்கு 5 நாட்கள் என்ற வண்ணம் 2 வாரங்களுக்கு 20 நிமிடங்கள் ஐஸ் மசாஜ் செய்தபோது கால்களின் தசை வலிமை, முட்டியின் இயக்க வரம்பு (range of motion) மேம்பட்டது. மற்றும் 50 அடி நடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எந்த சிகிச்சையும் எடுத்தக் கொள்ளாதவர்களை விட குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவித்தது.

சிகிச்சை எதுவும்எடுத்து கொள்ளாதவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள், 3 வாரம் சிகிச்சை எடுத்துக்கு கொண்டவர்களை போலவே வலிவில் மேம்பட்டார்கள் என்று வேறு ஒரு ஆய்வு தெரிவித்தது.

மற்றொரு ஆய்வு 20 நிமிடங்கள் 10 முறை ( ஐஸ்) குளிர்ந்த பொதிகள் (cold packs) எந்த சிகிச்சை எடுத்தக் கொள்ளாதவர்களை விட வீக்கத்தை குறைக்கிறது என்று காட்டியது. அதே நேரம் வெப்ப பொதிகள் (hot packs) எடுத்தவர்கள் எந்த சிகிச்சை எடுத்தக் கொள்ளாதவர்களை ஒப்பிடும் பொது வீக்கத்தின் மீது உள்ள தாக்கம் சமமாகவே இருந்தது.

இது எவ்வளவு பாதுகாப்பானது?
ஆராய்ச்சிகளில்க எந்த பக்க விளைவுகளும் பதிவிடப்படவில்லை. கவனமாக பயன்படுத்தப்படும் போது பொதுவாக வெப்பசிகிச்சை முறைகள் பாதுகாப்பானது.

மிக முக்கியமான அம்சம் என்ன?
ஆய்வுகள் சிறிதாகவும் மற்றும் குறைந்த தரம் கொண்டவையாக இருந்ததால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. முழங்கால் கீல் வாதம் உள்ளவர்களுக்கு இயக்க வரம்பு, முழங்கால் வலிமை மற்றும் செயல்பாடு,
ஐஸ் கட்டி மசாஜ் கொடுத்தால் திறன் மேம்படும் என்று "வெள்ளி" நிலை ஆதாரம் தெரிவிக்கிறது. குளிர்/ஐஸ் பொதிகள் வீக்கத்தை குறைக்க பயன்படுத்தப்படலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்.

Tools
Information