கிளைசெமிக் குறியீடு என்பது இரத்த குளுகோஸ் மட்டங்களை பாதிக்கக் கூடிய மாவுச்சத்து திறனுடைய அளவீடாகும். குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகள் மற்றும் இதயத்தமனி நோய் இடையேயான சம்மந்தத்தை ஆராய்ந்த அநேக சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் இருக்கும் போது, அவற்றில் பெரும்பாலானவை குறைந்த செயல்முறையியல் தரத்தை கொண்டவையாக உள்ளன. இதயத்தமனி நோயின் அபாய காரணிகளை மேம்படுத்துவதற்கு, ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகளை அறிவுறுத்துவதற்கு பரிந்துரைக்க சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளிலிருந்து சிறிது ஆதாரமே உள்ளது.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.