மது அல்லது போதைப் பிரச்னை கொண்ட பெண்களில் கர்ப்பக் காலம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின்பான வீட்டு சந்தித்தல்கள்

கர்ப்பக் காலம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின்பும், மது அல்லது போதைப் பிரச்னை கொண்ட பெண்களுக்கான வீட்டு சந்தித்தல்கள் பற்றி போதுமான தகவல் இல்லை.

கர்ப்பக் காலத்தின் போது மது அல்லது போதைப் பிரச்னை கொண்ட பெண்கள், கருச்சிதைவு, குறைந்த பிறப்பு எடை குழந்தைகள், தொற்றுகள், பிரசவத்திற்கு பின்னான மனச்சோர்வு, மற்றும் விலகல் அறிகுறிகள் அல்லது குறைபாடான வளர்ச்சியைக் கொண்ட குழந்தைகள் போன்றவற்றின் அதிகரித்த அபாயத்தை கொண்டிருப்பர். தனி நபர்கள், ஆரோக்கிய வல்லுநர்கள் குழுக்கள் அல்லது பயிற்சியளிக்கப்பட்ட சாதாரண பொது மக்களால் செய்யப்படும் வீட்டு சந்தித்தல்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சமூக விளைவுகளை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளன. குழந்தை பிறப்பிற்கு பின்பான வீட்டு சந்தித்தல்கள், இப்பெண்களில் போதை சிகிச்சை சேவைகளில் அவர்களின் ஈடுபாட்டை மற்றும் அவர்களின் கர்ப்பத்தடை பயன்பாட்டை அதிகரித்தன என்று 803 பெண்களை கொண்ட ஏழு சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது. ஆனால், இது குழந்தை அல்லது தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது என்பதை கூற பற்றாக்குறையான தரவு உள்ளது. கர்ப்பக் காலத்தின் போது தொடங்கப்படும் வீட்டு சந்தித்தல்களுடன் மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information