Skip to main content

முழங்கால் கீல்வாதத்திற்கான உடற்பயிற்சிகள்

பின்புலம்: முழங்கால் கீல்வாதம் மற்றும் உடற்பயிற்சி என்றால் என்ன?

கீல்வாதம் என்பது இடுப்பு போன்ற மூட்டுகளைக் தாக்கும் நோயாகும். குருத்தெலும்பை மூட்டு இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பைச் சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கத்திற்கு மாறாக வளர்ந்து அதனைச் சரி செய்வதற்கு பதிலாக, மோசமடையச் செய்யும். உதாரணமாக, எலும்பானது உருவிழந்து, மூட்டுவலியையும், மற்றும் ஸ்திரமற்ற மூட்டையும் உண்டாக்கும். கீல்வாதம் குருத்தெலும்பின் தேய்மானத்தினால் ஏற்படுகிறது என்றே மருத்துவர்கள் கருதினார்கள். ஆனால் இப்பொழுதோ, அது ஒரு முழுமையான மூட்டு நோய் என்று கருதப்படுகிறது.

தசை வலிமை, உடல் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது சீராக வைக்கிற எந்த ஒரு செயற்பாடாகவும் உடற்பயிற்சி இருக்கலாம். உடல் எடையைக் குறைக்கவும், தசை வலிமையை அதிகரிக்கவும், மற்றும் கீல்வாத அறிகுறிகளிலிருந்து விடுபடல் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் மக்கள் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

ஆய்வு பண்புகள்

இடுப்பு கீல்வாதத்திற்கு உடற்பயிற்சி அளிக்கும் விளைவுகளை குறித்து ஆய்வுகள் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த மேம்படுத்தப்பட்ட காக்குரேன் மறுஆய்வு சுருக்கம் வழங்குகிறது. மே 2013 வரை இதன் தொடர்புடைய அனைத்து ஆய்வுகளை தேடிய பிறகு, நாங்கள்முந்தைய திறனாய்விற்கு பிறகு 23 புதிய ஆய்வுகளைச் சேர்த்ததுடன், 54 ஆய்வுகள் (3913 பங்கேற்பாளர்கள்), பெரும்பாலும் லேசான முதல் மிதமான இடுப்பு கீல்வாதம் மட்டும் அல்லது முழங்கால் கீல்வாதத்துடன் கிடைத்தது. உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில், தாய்சி திட்டத்தில் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் கூடிய ஒரு ஆய்வு தவிர மற்ற ஆய்வில் பங்கேற்றவர்கள் நிலம் சார்ந்த பயிற்சி திட்டங்களான பாரம்பரிய தசை வலுப்படுத்துதல், செயல்பாட்டு பயிற்சி மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சி திட்டங்களை தனித்தனியாக கண்காணிக்கப்பட்டோ அல்லது ஒரு குழுவின் ஒரு பகுதியாகவோ மேற்கொண்டார்கள். 44 ஆய்வுகள் (3537 பங்கேற்பாளர்கள்) இருந்து ஆதாரமாகப் உடனடியாக சிகிச்சைக்கு பிறகு உடற்பயிற்சி விளைவுகள் காட்டுகிறது; 12 ஆய்வுகள் இரண்டு ஆறு மாத பிந்தைய சிகிச்சை பேண்தகைமை தகவல்களை அனுப்புகின்றது. இங்கே நாங்கள் சிகிச்சை காலம் முடிந்தவுடன் உடனடி முடிவுகளை மட்டுமே தெருவிகின்றோம்.

முக்கிய முடிவுகள்

0-100 புள்ளிகள் கொண்ட அளவீட்டில் வலி (குறைந்த புள்ளிகள் என்றால் குறைந்த வலி):

- உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு உடற்பயிற்சி திட்டத்தை முடித்தவர்கள், சிகிச்சை முடிவில் அவர்களின் வலியை 12 புள்ளிகள் குறைவாக (10 முதல் 15) இருந்தது (12% முழுமையான முன்னேற்றம்) என்று மதிப்பீடு செய்தார்கள்.

-ஒரு உடற்பயிற்சி திட்டத்தை செய்து முடித்தவர்கள் தங்களின் வலியை 32 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

-உடற்பயிற்சி செய்யாதவர்கள் தங்களின் வலியை 44 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

0 முதல் 100 புள்ளிகள் என்ற அளவுகோலில் உடல் செயல்பாடு (குறைந்தளவு புள்ளிகள் என்றால் சிறந்த உடல் செயல்பாடு):

• உடற்பயிற்சி திட்டத்தை செய்து முடித்தவர்கள் உடற்பயிற்சி செய்யாதவர்களை ஒப்பிடுகையில், சிகிச்சை முடிவில் அவர்களின் உடல் செயல்பாட்டை 10 புள்ளிகள் (8 முதல் 13 புள்ளிகள்) குறைவாக இருந்ததாக , (10% முழுமையான முன்னேற்றம்) மதிப்பீடு செய்தார்கள்.

• உடற்பயிற்சி திட்டத்தை செய்து முடித்தவர்கள் தங்களின் உடல் செயல்பாட்டை 28 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

• உடற்பயிற்சி செய்யாதவர்கள் தங்களின் உடல் செயல்பாட்டை 38 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

0 முதல் 100 புள்ளிகள் என்ற அளவுகோலில் வாழ்க்கை தர மதிப்பீடு (அதிக புள்ளிகள் என்றால் சிறந்த உடல் செயல்பாடு):

• மொத்தத்தில் பார்க்கும்போது , உடற்பயிற்சி திட்டத்தை செய்து முடித்தவர்கள், சிகிச்சை முடிவில் அவர்களின் வாழ்க்கை தரத்தை 4 புள்ளிகள் (2 முதல் 5 புள்ளிகள்) அதிகமாக இருந்தது (4% முழுமையான முன்னேற்றம்) என்று மதிப்பீடு செய்தார்கள்.

• உடற்பயிற்சி திட்டத்தை செய்து முடித்தவர்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை 47 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

• உடற்பயிற்சி செய்யாதவர்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை 43 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

விலகியவர்கள்

• நூறில் ஒருவரளவில் குறைவாக உடற்பயிற்சி திட்டத்தைக் கைவிட்டார்கள் (1% முழுமையான குறைவு).

• உடற்பயிற்சி செய்தவர்களில் நூறில் 14 பேர் கைவிட்டார்கள்.

• உடற்பயிற்சி செய்யாதவர்களில் நூறில் 15 பேர் கைவிட்டார்கள்.

சான்றின் தரம்

முழங்கால் வாதம் உள்ளவர்களுக்கு, சிகிச்சையை நிறுத்தியபின் உடனடியாக உடற்பயிற்சி கைவிடுபவர்கள் அதிகமின்றி , வலியை மிதமான அளவு குறைக்கும் என்றும் மற்றும் வாழ்க்கை தரத்தையும் சற்று மேம்படுத்தும் என்றும் உயர்-தர சான்றுகள் தெரிவிகின்றன. இனி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் இந்த முடிவுகளை மாற்றி மதிப்பீடு செய்ய சாத்தியமில்லை.

சிகிச்சைகளை நிறுத்தியவுடன் உடனடியான உடற்பயிற்சி உடற்சார்ந்த செயல்பாட்டு திறனில் மிதமான மேம்பாட்டை அளிக்கிறது என்று மிதமான-தர சான்றுகள் தெரிவிக்கின்றன. இனி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி இந்த முடிவுகளை மாற்றி மதிப்பீடு செய்யலாம்.

பெரும்பாலான மருத்துவ ஆய்வுகள் உடற்பயிற்சியின் போது காயங்கள் அல்லது விழுதல் போன்ற பக்க விளைவுகள் பற்றி எந்த துல்லியமான தகவல்களும் வழங்கவில்லை, ஆனால் நாங்கள் இது அரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எட்டு ஆய்வுகள் உடற்பயிற்சி திட்டத்தின் காரணமாக முழங்கால் மற்றும் கீழ்முதுகு வலி அதிகமாகியது என்று தெரிவித்தன . தேர்வுசெயப்பட்ட அனைத்து ஆய்வுகளும் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தெரிவிக்கவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு:சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்,தங்கமணி ராமலிங்கம்,ப்ளசிங்டா விஜய்,ஸ்ரீகேசவன் சபாபதி. இந்த மொழிபெயர்ப்பு குறித்த கேள்விகளுக்கு, தொடர்பு கொள்ள (மின்னஞ்சல்):umsrikes@myumanitoba.ca; atramalingam@gmail.com

Citation
Lawford BJ, Hall M, Hinman RS, Van der Esch M, Harmer AR, Spiers L, Kimp A, Dell'Isola A, Bennell KL. Exercise for osteoarthritis of the knee. Cochrane Database of Systematic Reviews 2024, Issue 12. Art. No.: CD004376. DOI: 10.1002/14651858.CD004376.pub4.