புகையில்லா புகையிலையை மக்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு உதவும் வழிமுறைகள் (புகையிலை மெல்லுதல், பொடி மற்றும் புகையிலைத் தூள் உட்பட )

பின்புலம்

புகையில்லா புகையிலை என்பது, புகையிலையை வாயில் தக்க வைத்து மற்றும் வாயினுடே உள்ள உட்பூச்சு மூலம் நிக்கோட்டின் உறிஞ்சப்படக் கூடிய எந்த ஒரு தயாரிப்பும் ஆகும். புகையிலை எரிக்கப்பட்டு, மற்றும் நுரையீரல் மூலம் நிக்கோட்டின் உறிஞ்சப்படும் சிகரெட்டுகள் மற்றும் பிற தயாரிப்புகளைக் காட்டிலும் புகையில்லா புகையிலை ஆபத்து குறைந்ததாகும். எனினும், புகையில்லா புகையிலை, நிக்கோட்டின் அடிமைத்தனத்திற்கு வழி வகுக்கும் மற்றும், குறிப்பாக வாய்க்கு கேடு விளைவிக்கும். உலகமெங்கும், புகையிலை மெல்லுதல், பொடி மற்றும் புகையிலைத் தூள் உட்பட பல வகையான புகையில்லா புகையிலை பயன்படுத்தப்படுகிறது, ஆரோக்கிய அபாயங்கள், தயாரிப்பு வகைக்கு ஏற்றவாறு மாறுபடும்.

செயல்முறைகள்

நிக்கோட்டின் மாற்று சிகிச்சை, பிற மருந்து சிகிச்சைகள் மற்றும் நடத்தை ஆதரவு உட்பட புகையில்லா புகையிலையை மக்கள் நிறுத்துவதற்கு உதவும் சிகிச்சை தலையீடுகள் பற்றிய சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் திறனாய்வு செய்தோம். இந்த ஆதாரம் ஜூன் 2015 வரை தற்போதையது. ஆறு மாதங்களுக்கு பிறகு புகையில்லா புகையிலை அல்லது பிற தயாரிப்புகளை பயன்படுத்துவதை நிறுத்திய பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை சோதனைகள் அறிக்கையிட வேண்டும்.

முடிவுகள்

16,000 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 34 தொடர்புடைய சோதனைகளை நாங்கள் கண்டோம். ஒன்றை தவிர அனைத்தும் யுஎஸ்ஏ-வில் நடத்தப்பட்டது. பல் நல மருத்துவகங்களில் நடைபெற்ற சில ஆய்வுகள், புகையில்லா புகையிலை பழக்கத்தை நிறுத்த அல்லது நிறுத்த ஆர்வம் இல்லாத பயனர்களுக்கு வாய் நல பிரச்சனைகள் குறித்த அறிவுரையை வழங்கின. நிறுத்த விரும்பிய பயனர்களை சில ஆய்வுகள் சேர்த்தன.

3,722 பங்கேற்பாளர்கள் கொண்ட 16 சோதனைகள் மருந்து சிகிச்சைகளை சோதித்தன. பல விதங்களான நிக்கோட்டின் மாற்று சிகிச்சையை (பைவ் கம், டூ பேச், பைவ் லோசன்) பன்னிரண்டு ஆய்வுகள் சோதித்தன. பழக்கத்தை மக்கள் விட, நிக்கோட்டின் லோசன் உதவக் கூடும் என்று ஆதாரம் பரிந்துரைக்கிறது, ஆனால் ஆதாரத்தின் தரம் குறைவாக உள்ளது மற்றும் அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது. நிக்கோட்டின் கம் அல்லது பேட்ச்கள் உதவக் கூடும் என்பதை நிச்சயமாக சொல்ல போதுமான ஆதாரம் இருக்கவில்லை. புகையில்லா புகையிலை பயன்பாட்டை மக்கள் நிறுத்துவதற்கு, வரெனிலைன் (புகைப் பிடிப்பவர்கள் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் ஒரு மருந்து) உதவக் கூடும் என்று இரண்டு சோதனைகள் பரிந்துரைத்தன. புகையில்லா புகையிலை பயன்பாட்டை மக்கள் நிறுத்துவதற்கு, புப்ரோபியன் (புகைப் பிடிப்பவர்கள் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் ஒரு எதிர்-மனச்சோர்வு மருந்து) உதவ வில்லை என்று இரண்டு சிறிய சோதனைகள் கண்டன.

12, 394 பங்கேற்பாளர்கள் கொண்ட பதினேழு ஆய்வுகள் நடத்தை ஆதரவு சிகிச்சையை சோதித்தன. சுருக்கமான அறிவுரை, சுய-உதவி பொருள்கள், தொலைபேசி ஆதரவு, ஒரு வலைத்தளத்திற்கான அணுகல், மற்றும் பொருள்களின் கூட்டு கலவைகள் ஆகியவற்றை நடத்தை ஆதரவு உள்ளடக்கக் கூடும். சில சோதனைகள், பலனிற்கான தெளிவான ஆதாரத்தை அளித்தன, மற்றும் சிலவை எந்த விளைவையும் காணவில்லை என்பது போன்று, முடிவுகளில் அதிக அளவில் வேறுபாடு இருந்தது. எந்த தனி பொருள்கள் சிறப்பான ஆதரவாக இருந்தன என்பது பற்றி நாங்கள் உறுதியாக இல்லை, ஆனால் தொலைபேசி ஆதரவிற்கு அணுகல் அளித்தது பொதுவாக உதவியது என்று தெரிகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information