வலியுடன் கூடிய மாதவிடாய்க்கான உடற்பயிற்சிகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

வலியுடன் கூடிய மாதவிடாய், கீழ்முதுகுக்கும், மேல்தொடைபகுதிக்கும் பரவக்கூடிய, தசைப்பிடிப்புடனான அடிவயிற்று வலியை ஏற்படுத்தக்க்கூடியது. தசைப்பிடிப்புகள் பொதுவாக குமட்டல், தலைவலி, சோர்வு மற்றும் வயிற்றுப்போக்குடன் சேர்ந்து வருவதுண்டு. இரண்டாம் பட்சமான வலியுடன் கூடிய மாதவிடாய் கொண்ட பெண்கள் உடல் அமைப்பு வேறுபாட்டுடன் கூடிய நாள்பட்ட இடுப்பு வலி கொண்டிருப்பார்கள் ஆனால் முதல்நிலை வலியுடன் கூடிய மாதவிடாய்க்காரர்களுக்கு எந்த உடல் அமைப்பு வேறுபாடு இருக்காது. மிகை-வலி மாதவிலக்கின் அறிகுறிகளுக்கு, உடற்பயிற்சிமுறைகள் ஒரு மருந்தில்லா சிகிச்சை வழியாக அறிவுருத்தப்பட்டுவருகிறது. மிகை-வலி மாதவிலக்கின் அறிகுறிகளுக்க்கான சிகிச்சையில் உடற்பயிற்சிகளின் திறன் பற்றிய சான்றுகளை ஆய்வதே, இந்த திறனாய்வின் நோக்கமாக இருந்தது. குறைந்த தரதுடன்கூடிய ஒரே ஒரு ஆராய்ச்சி கண்டறியப்பட்டது. அது உடற்பயிற்சிகள் மாதவிடாய் காலகட்டத்தில், மிகை-வலி மாதவிலக்கின் சில அறிகுறிகளை குறைக்கலாம் என்று கூறுகிறது குறைந்த அளவு ஆதாரme இருப்பதால் இந்த திறன் முடிவுகள் சற்று கவனத்துடன் எச்சரிக்கையுடன் பார்க்கப்படவேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இர .செந்தில் குமார் & மு. கீதா, மற்றும் சி.இ.பி.என்.அர் குழு