அனைத்து மருத்துவ நிலைகளுக்கான போலி சிகிச்சை (ப்ளசிபோ) தலையீடுகள்

பெரும்பாலும், போலி சிகிச்சை தலையீடுகள் பல மருத்துவ நிலைகளை கணிசமாக மேம்படுத்துவதாக கோரப்படுகிறது. எனினும், போலி சிகிச்சைகளின் விளைவுகளைப் பற்றிய பெரும்பாலான ஆய்வு அறிக்கைகள் போலி சிகிச்சை அல்லது சிகிச்சையின்மைக்கு நோயாளிகளுக்கு சமவாய்ப்பளிக்காத நம்பகமற்ற ஆய்வுகளின் அடிப்படையில் உள்ளது.

போலி சிகிச்சைகளின் விளைவைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள 60 ஆரோக்கிய பராமரிப்பு பிரச்சினைகளை உள்ளடக்கி, போலி சிகிச்சையை சிகிச்சையின்மையோடு ஒப்பிட்ட 202 சோதனைகளை திறனாய்வு செய்தோம். பொதுவாக, போலி சிகிச்சைகள் பெரியளவில் ஆரோக்கிய நலன்களை உண்டாக்கவில்லை என்ற போதும், சராசரியாக, நோயாளிகள் சுய-அறிக்கையிட்ட வலி போன்ற விளைவுகளில் ஒரு சாதாரண விளைவை ஏற்படுத்தியது. எனினும், நன்றாக-நடத்தப்பட்ட சோதனைகளில் கூட வலியின் மேலிருந்த விளைவு பெரியளவு முதல் முற்றிலும்-இல்லாதது வரை வேறுப்பட்டது. சோதனைகள் நடத்தப்பட்டதிலிருந்த வேறுபாடுகள், பயன்படுத்தப்பட்ட போலி சிகிச்சை வகை, மற்றும் சோதனை போலி சிகிச்சையோடு சம்மந்தப்பட்டது என்று நோயாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டதா போன்றவை போலி சிகிச்சைகளின் விளைவுகளிலிருந்த வேறுபாடுகளை பகுதியளவில் விவரிக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information