மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கு (carpal tunnel syndrome) அறுவை சிகிச்சை

மணிக்கட்டுக் கால்வாய் கூட்டறிகுறி சிகிச்சைக்கு மாற்று அறுவை சிகிச்சை செயல் முறையில் வலுவான திறந்த மணிக்கட்டுக் கால்வாய் விடுவிப்பை (OCTR) மாற்றியமைக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. வழக்கமான OCTR க்கு பதிலாக, குறைவாக துளையிடும் சிறப்பு அறுவைச் சிகிச்சையை பயன்படுத்துவதற்கான முடிவுவெடுப்பது நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களது முன்னுரிமைசார்ந்து வழிகாட்டப்படுகிறது.

மணிக்கட்டு வழியாக செல்லும் நரம்பு (median nerve) அழுத்தப்படுவதால் மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு உண்டாகிறது. பொதுவாக கைகளில் கூரிய கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் வலி போன்றவற்றை இது உண்டுபண்ணும். லேசானது முதல் கடுமையானது வரை அதன் தீவிரம் இருக்கும். தீவிரமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு பொதுவாக அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படும். பல்வேறுபட்ட அறுவை சிகிச்சை முறைகளை ஒப்பிடுவது இந்த திறனாய்வின் நோக்கமாகும். ஒரு சிறப்பு வகை அறுவைசிகிச்சை(உள்நோக்கியியல் மணிக்கட்டுக் கால்வாய் விடுவிப்பு) மக்களுக்கு விரைவில் (உத்தேசமாக சராசரி ஒரு வாரம்) அவர்களின் அன்றாட செயல்பாடுகள் அல்லது பணிக்கு மீண்டும் திரும்புதலுக்கான வலிமையினை அளிப்பதாக தோன்றினாலும் குறுகிய அல்லது நீண்ட காலத்தில் நோய் அறிகுறிகளில் இருந்து விடுபட வழக்கமான திறந்த மணிக்கட்டுக் கால்வாய் விடுவித்தல் அறுவைச் சிகிச்சையையின் மாற்றுகள் பயனுள்ளது என்று கூற சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளில் இருந்து பெறப்பட்ட தற்போதைய நிலவரப்படியிலான ஆதாரங்கள் இல்லை.லேசான முதல் கடுமையானது அதன் தீவிரம் வரை இருக்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்

Tools
Information