அறிகுறியில்ல நோயற்ற புதையுண்ட ஞானபல்லை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது அல்லது அகற்றாமல் தக்கவைத்து கொள்வது

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

விமர்சன கேள்வி

இந்த விமர்சனம் காக்ரேன் வாய்வழி சுகாதார குழு மூலம் செய்யப்பட்டது.இதில், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களுக்கு நோயற்ற புதையுண்ட ஞானபல்லினை எடுப்பது மூலமும் மற்றும் எடுக்காமல் தக்கவைபத்தின் விளைவுகளை மதிப்பீடு செய்ய முற்படுகிறது. இது 2012 யில் வெளிவந்த விமர்சனத்தின் மேம்படுத்தல்.

பின்னணி

ஞானப்பல் அல்லது மூன்றாவது கடைவாய்ப்பல், பொதுவாக 17 முதல் 26 வயது வரை வெளிவரக் கூடும். இறுதியாக வெளிவரக்கூடிய பல்லும் இதுவே, இவை இரண்டாம் கடவாய்ப்பல்லின் மிக அருகில் வெளிவரக்கூடியவை. இவை வெளிவர குறுகிய இடைவெளி தான் உள்ளது. ஞானப்பல் அடிக்கடி வெளிவராததும், அரைகுறையாக வெளிவந்ததாக காணப்படும். இரண்டாவது கடைவாய்ப்பல் தடுப்புச்சுவராக இருப்பதால் ஞானப்பல் முழுமையாக வெளிவர முடியாமல் போகிறது. எந்த அடையாளமும், அறிகுறியும் இல்லாத ஞானப்பல் நோயற்ற புதையுண்ட ஞானப்பல் என அழைக்கப்படுகிறது.

புதையுண்ட ஞானப்பல் வீக்கமும், ஈறு புண்ணையும் உண்டாக்கும் தன்மை உள்ளது. இவை இரண்டாம் கடைவாய்ப்பலின் வேர் பகுதியை பாதிக்ககூடும், மற்றும் கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகக்கூடும். பொதுவாக மேற்குறிப்பிட்ட நோயின் அறிகுறிகள் தென்பட்டால் ஞானபல்லை எடுப்பது சாலசிறந்தது. நோயற்ற பாதிக்கப்பட்ட ஞானப்பல்லை எடுக்காமல் அல்லது தக்கவைத்து கொள்ள எந்த உடன்பாடும் இதுவரை திட்டவட்டமாக இல்லை.

ஆய்வு பண்புகள்

மருத்துவ இலக்கியத்தை ஆராய முற்பட்டபோது, ஒரு சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை மற்றும் ஒரு முற்போக்கு Cohort ஆய்வு மட்டும் இந்த விமர்சனத்தில் உள்ளது. இந்த ஆய்வில் 493 நோயாளிகள் பங்குபெற்றனர். சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை இங்கிலாந்தில் உள்ள பல் மருத்துவமனையில் 77 இளம் ஆண் பெண் வயதினரை உள்ளடக்கியது. மற்றும் Cohort ஆய்வு அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 416 ஆண்கள், வயது 21 முதல் 84 வரை உள்ளடக்கியது.

முக்கிய முடிவுகள்

நோயற்ற புதையுண்ட ஞானப்பல் எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை.

ஒரு ஆய்வு மட்டும் குறைந்த ஆதாரத்தோடு கூறுவது என்னவென்றால், நோயற்ற புதையுண்ட ஞானப்பல், நீண்ட காலத்தில் இரண்டாம் கடைவாய்ப்பல்லில் ஈறு நோயை உண்டாக்கும் தன்மை உள்ளது. அதே ஆய்வில் நோயற்ற புதையுண்ட ஞானப்பல்லை எடுக்காமல் விடுவதன் மூலம் இரண்டாம் கடைவாய்ப்பல் சொத்தை ஆகும் தன்மையை கொண்டது என்று ஆதரப்பூர்வமாக கூற இயலவில்லை.

மற்றொரு குறைநிறைந்த ஆய்வில், நோயற்ற பாதிக்கப்பட்ட ஞானப்பல்லை எடுப்பதன் மூலம் பல் வரிசை சீர்கேடும் என்று எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள் நம்முடைய முதன்மை விளைவுகளான - வாழ்கை சுகாதார தொடர்புடைய தரமான தன்மையை வெளிபடுத்தவில்லை அல்லது இரண்டாம் விளைவுகளான சிகிச்சையின் செலவு மற்றும் நோயற்ற பாதிக்கப்பட்ட ஞானப்பல்லினால் ஏற்பட கூடிய வேர் அழிவு, கட்டிகள், நீர்க்கட்டிகள், வீக்கம் போன்றவையும் அதை எடுத்தபிறகு ஏற்படக்கூடிய நரம்பு காயம், பற்குழி, ஆஸ்டைடிஸ் அறுவை சிகிச்சை பிறகு உள்ள பாதிப்புக்கள், அடுத்த பல்லில் ஏற்படும் பாதிப்பு, இரத்த போக்கு, எலும்பு அரிப்பு, மருத்துவத்தினால் அல்லது வீக்கத்தினால் உள்ள ஆதாரங்களை ஆராயவில்லை.

ஆதாரங்களின் தரம்

இந்த விமர்சனத்தில் பங்குபெற்ற இரண்டு ஆய்வுகளும் மிக மிக குறைந்த ஆதாரத்தை வெளிப்படுத்துவதால் இந்த முடிவுகளை சார்ந்திருக்க இயலவில்லை. மருத்துவ நடைமுறையில் தரம் உயர்ந்த ஆய்வு மிக விரைவில் தேவைப்படுகிறது. மருத்துவ நிபுணர்களின் சான்றும், நோயாளியின் மதிப்பையும் கருத்தில் சிகிச்சையின் முடிவுகள் இருக்க வேண்டும். நோயற்ற பாதிக்கப்பட்ட ஞானப்பல்லை தக்கவைப்பது முடிவு என்றால், சீரான இடைவெளியில் நோயற்ற புதையுண்ட ஞானப்பல்லை மருத்துவ மதிப்பீடு செய்வதால் விரும்பத்தகாத விளைவுகளை தவிர்க்க முடியும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [யுவராஜ், ஜாபெஸ் பால்]