அதிக எடை அல்லது உடல் பருமனுக்கான உடற்பயிற்சி

அதிக எடை அல்லது உடல் பருமன் என்பது முக்கியமான பொது சுகாதார பிரச்சினையாகும் மற்றும் பல தீவிர நோய்களுடன் தொடர்புடையதாகிறது. அதிக எடை மற்றும் உடல் பருமன், உணவு உட்கொள்ளும் முறை மற்றும் உடல் இயக்க அளவு போன்ற வாழ்க்கை முறை காரணிகளை சார்ந்திருக்கிறது. எனவே அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு உரிய சிகிச்சையும் பொதுவாக உணவு கட்டுபாடு (பத்தியம்) மற்றும் உடற்பயிற்சியையும் உள்ளடக்கியதாகிறது. அதிக எடை அல்லது உடல் பருமனாக இருக்கும் மக்களுக்கு உடற்பயிற்சி, குறிப்பாக பத்திய உணவுடான் சேர்க்கையில் உடல் எடை மற்றும் இதய நோய் ஆபத்து காரணிகள் குறைப்பதில் சாதகமான விளைவை ஏற்படுத்தும், மற்றும் உடற்பயிற்சி உடல் எடையை குறைக்கவில்லை என்றாலும் உடல் நலத்தை மேம்படுத்தும். பாதகமான நிகழ்வுகள், வாழ்க்கை தரம், நோய்ப் பாதித்த அளவு, மருத்துவ செலவுகள் அல்லது இறப்பு குறித்து தரவு ஏதும் கிட்டவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: பிறை சுடன் ஜெயகாந்தன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information