டென்னிஸ் முழங்கை (TENNIS ELBOW) வலிக்கு ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளின் (NSAIDS) சிகிச்சை

இந்த காக்ரைன் திறனாய்வின் மூலம் நாங்கள் ஆராய்ச்சிகளில் இருந்து முழங்கையின் வெளிநோக்கி பகுதியில் வலி (lateral elbow pain) அல்லது (tennis elbow) டென்னிஸ் எல்போ என்று அழைக்கப்படும் வலிக்கு ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் (NSAIDs) ஏற்படுத்தும் விளைவுகளை பற்றி அறிந்தவற்றை கூறுகிறோம். 664 பங்கேற்பாளர்கள் மீது நடத்தப்பட்ட 13 சோதனைகளின் விளைவுகளை இந்த திறனாய்வு பின்வருமாறு வெளிப்படுத்துகிறது:

முழங்கையின் வெளிநோக்கி பகுதி வலி உள்ள மக்கள்:

-புற மருந்துப் பூச்சு NSAIDsகளின் (தோல் மீது பூசப்படும் களிம்பு) சிகிச்சையின் பலனை அதிகரிக்க கூடும்.

NSAID வலியை குறைக்கிறது என்பது எங்களால் நிச்சயமாக கூற இயலாது, ஏனெனில் அவை குறைந்த தரமுடைய ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது.

NSAIDs தோல் மீது பூசப்படுவதால் தோலில் தடிப்பு ஏற்ப்படலாம்.

-மாத்திரை வடிவில் எடுத்துக்கொளும் NSAID வலியை குறைத்து அல்லது செயல்திறனை அதிகப்படுத்துகிறது என்பது நிச்சயமற்றது, ஏனெனில் அவை குறைந்த தரமுடைய ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டவை.

மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ளப்படும் NSAIDsகள் வயிற்றுவலியையும், வயிற்றுபோக்கையும் ஏற்படுத்தலாம், ஆனால் இவற்றை நாங்கள் துல்லியமாக மதிப்பிட முடியவில்லை, ஏனெனில் அவை குறைந்த தரமுடைய ஆதாரங்களிலிருந்து அறியப்பட்டவை.

வாழ்க்கை தரம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல் இல்லை.

எங்களிடம் பக்கவிளைவுகள் மற்ற சிக்கல்கள், குறிப்பாக அரிதான ஆனால் தீவிர பக்கவிளைவுகள் பற்றிய துல்லியமான தகவல் எதுவும் இல்லை. NSAIDs சிறுநீரகம் மற்றும் இருதயத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், மற்றும் தோல் மீது பூசப்படும் NSAIDsகள் தோலில்தடிப்புகளை ஏற்படுத்தலாம்.

முழங்கை வெளிநோக்கி பகுதி வலி என்றால் என்ன மற்றும் NSAIDsகள் என்றால் என்ன?

முழங்கை வெளிநோக்கி பகுதி வலி அல்லது டென்னிஸ் எல்போ எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஏற்படலாம் அல்லது முழங்கையின் தசைநாரில் ஏற்படும் அதிக அழுத்தத்தினாலும் ஏற்படலாம். இந்த நோய் (முழங்கையின் வெளிநோக்கி முண்டுமேவி epicondyle) மற்றும் மேல் முன்கை பகுதி வலி மற்றும் தொடுவதற்கு மென்மையாகவும் இருக்காலாம். வலி ஆறு மாதத்திலிருந்து இரண்டு வருடத்திற்கு நீடிக்கலாம் மற்றும் அது தானாக குறையலாம். பல சிகிச்சை முறைகள் முழங்கை வலியை குணப்படுத்த அளிக்கபடுகிறது ஆனால் வலி தானாகவே சரியாகிறதா அல்லது இந்த சிகிச்சையின் முலமா என்பது தெளிவாக தெரியவில்ல.

ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் (NSAIDs) (உதாரணமாக ஐபுப்ரோபென், டைகுலோபிநெக், செலோகாசிப்) வலியை குறைக்க பயன்படுத்தப்படலாம். NSAIDs களிம்பாக தோல் மீது மேற்பூச்சாகவும் அல்லது வாய்வழியாக மாத்திரை வடிவிலும் எடுத்துக் கொள்ள முடியும்.

NSAIDகள் பயன்படுத்தும் மக்களின் முழங்கையின் வெளிநோக்கி பகுதி வலியில் என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த மதிப்பீடு

வலி (அதிக மதிப்பீடு என்பது மோசமான அல்லது மேலும் கடுமையான வலியாகும்).நான்கு வாரங்கள் ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளை களிம்பாக பயன்படுத்த்திய மக்கள் மருந்தற்ற குளிகையுடன் பயன்படுத்த்தியோர்ரை ஒப்பிடும்போது அவர்களின் வலி பற்றிய 0 முதல் 10 வரையிலான மதிப்பீட்டு அளவில் 1.6 புள்ளிகள் அளவு குறைந்து இருந்தது. (16 சதவீதம் திட்டவட்டமான முன்னேற்றம்).

NSAIDயை களிம்பாக பயன்படுத்தும் மக்களின் வலி நான்கு வாரங்களுக்கு பின் 0 முதல் 10 வரையிலான அளவு கோலில் 2.14 என்று மதிப்பிட்டனர்.

மருந்தற்ற குளிகை களிம்பை உபயோகித்த மக்கள் 0 முதல் 10 வரையிலான வலி அளவில்கோளில் 3.78 என்று மதிப்பிட்டனர்.

வெற்றிகரமான சிகிச்சை:

-மேலும் 24 பேர் NSAIDளை மேற்ப்பூச்சாக பயன்படுத்தியவர்கள் தங்கள் நிலையில் முன்னேற்றம் பெற்றனர். (24 சதவீதம் முழுமையான முன்னேற்றம்)

NSAIDளை களிம்பாக பயன்படுத்தும் மக்களில் 100 ல் 73 பேருக்கு முன்னேற்றம் தெரிந்தது.

வெற்று சிகிச்சை முறையை பயன்படுத்தியதில் 100ல் 49 பேருக்கு முன்னேற்றம் தெரிந்தது.

பக்க விளைவுகள்:
-NSAID, களிம்பு பயன்படுத்திய 100 பேரில், ஒருவருக்கு கூடுதலாக களிம்பு தடவிய இடத்தில் தோல் தடிப்பு போன்ற சிறிய பக்க விளைவுகள் ஏற்பட்டது.

NSAID களிம்பை பயன்படுத்திய 100ல் 2 பேர்க்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது,

வெற்று சிகிச்சை களிம்பு பயன்படுத்திய நூற்றில் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பு: அம்பிகை அருணகிரி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information