தாயிடம் இருத்து குழந்தைகளுக்கு பரவும் எச்ஐவி (HIV)யின் ஆபத்தை குறைக்கும் அண்டி ரெட்ரோவைரல் (antiretroviral) மருந்து

2009 ஆம் ஆண்டின் இறுதி வரையில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 2.5 மில்லியன் குழந்தைகள்எச்ஐவி/ எய்ட்ஸ்யுடன் வாழ்ந்து வருவதாக(WHO 2011 )மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான குழந்தைகளுக்குக் கர்ப்ப காலத்திலோ, குழந்தை பிறக்கும் நேரத்திலோ அல்லது தாய்ப்பால் மூலமாகவோ தாயிடமிருந்து குழந்தைக்குப்பரவல் முறையில் இந்நோய் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்திலோ, குழந்தை பிறக்கும் நேரத்திலோ அல்லது தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலோ எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட தாய் , குழந்தை அல்லது இருவருக்கும் அண்டிரெட்ரோ வைரல் (antiretroviral) மருந்து செலுத்துவதன் மூலம் தாயிடம் இருந்து பரவும் எச்ஐவி / எய்ட்ஸ் நோய் பரவுதலை குறைக்கலாம். அண்டி ரெட்ரோ வைரல் மருந்துகள் மூலம் பக்கவிளைவுகள் இல்லாமல் எச்ஐவி / எய்ட்ஸ் பரவுதல் குறையுமா என்று காண்பதே இத்திறனாய்வின் நோக்கமாக உள்ளது.

இந்த திறனாய்விற்கு தகுதியுடையதென 18901 பங்கேற்பாளர்கள் சேர்க்கப்பட்டுள்ள 25 சோதனைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த திறனாய்விற்கு உட்படுத்தப்பட்ட சோதனைகளில் அண்டி ரெட்ரோ வைரல்க்கு எதிராக மருந்தில்லா குளிகைகள் பயன்பாடு, ஒரே அண்டிரெட்ரோ வைரல் மருந்து பயன்படுத்திய குறுகிய சிகிச்சை திட்டங்களுக்கு எதிராக நீண்ட திட்டங்கள், வெவ்வேறு மருந்துகள் மற்றும் வேறு மருந்து சேர்க்கைகள் பயன்படுத்தப்பட்ட அண்டி ரெட்ரோ வைரால் சிகிச்சை திட்டங்கள் ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டன. இந்த சோதனைகளின் திறனாய்வு சில குறிப்பிட்ட அண்டி ரெட்ரோவைரல் மருந்துகளின் குறுகிய காலம் உட்கொள்ளும் சிகிச்சைக்கு தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவக்கூடிய எச்ஐவி / எய்ட்ஸ் நோயை குறைக்கும் திறன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது ஆனால் குறுகியகாலத்தில் எவ்விதமான பாதுகாப்பு தொடர்பான கவலைகளோடு இவை சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: பிறைசூடன் ஜெயகாந்தன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information