மன அழுத்த எதிர்ப்பு சிகிச்சைகள், பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு மன அழுத்தத்தை விடுவிக்க உதவலாம். ஆனால் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றி அறிய மேலும் ஆராய்ச்சி தேவை.

பார்கின்சன் நோய் மனநலம் மற்றும் உடல் நல நோய்க்குறிகளை ஏற்படுத்தலாம். இதில் மிகப்பொதுவானது மனச்சோர்வு ஆகும். வாய்வழி உளச்சோர்வு போக்கிகள், மின் வலிப்பு சிகிச்சை அல்லது நடத்தை கணிப்புச் சிகிச்சை ஆகியவை தற்போது பார்கின்ஸன் நோயாளிகளின் மனச் சோர்வை நீக்குவதற்கான சிகிச்சையாக பயன்படுத்தப்படுகின்றன. மின்தூண்டல் சிகிச்சை அல்லது நடத்தை சிகிச்சையின் பலாபலன்களை ஆய்வுசெய்த சோதனைகள்எதுவும் காணப்படவில்லை. உளச்சோர்வு போக்கிகளை சோதித்த 3 ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். மனச்சோர்வு உள்ள பார்க்கின்சன் நோயாளிகளுக்கு உளச்சோர்வு போக்கிகளின் திறன் பற்றிய ஆய்வுகளின் ஆதாரம் போதுமானதாக இல்லை என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது. இதுவரை ஆராய்ச்சிகளில் பக்க விளைவுகள் கடுமையானதாக இருக்கவில்லை. பார்வை மனமருட்சி (visual hallucinations)மற்றும் குழப்பம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information