இதய செயலிழப்பிற்கான உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு சிகிச்சை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்புலம்

இதய செயலிழப்பு கொண்ட மக்கள், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தரம் மற்றும் இறுதியில், அவர்களின் மருத்துவமனை அனுமதி விகிதம் மற்றும் இறப்பு ஆகியவற்றின் மேல் தீங்கு ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க உடற்பயிற்சி திறன் குறைவுகளை அனுபவிப்பர்.

ஆய்வுப் பண்புகள்

இதய செயலிழப்பு கொண்ட 18 வயதிற்கு மேலுள்ள வயது வந்தோரில், சிகிச்சையின்மையோடு ஒப்பிடப்பட்ட உடற்பயிற்சி-சார்ந்த சிகிச்சைகளின் திறனைக் கண்டறிந்த சீரற்ற சமவாய்ப்பு கட்டுப்பாடு சோதனைகளுக்காக (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலையீடுகள் கொண்ட, தோராயமாக ஒரு கட்டுப்பாடு தலையீடு அல்லது எந்த தலையீடும் இல்லாமல், பங்கேற்பாளர்களுக்கு சீரற்ற முறையில் ஒதுக்கப்பட்டு ஒப்பிடுவது போன்றவற்றை கொண்ட சோதனைகள்) நாங்கள் அறிவியல் இலக்கியத்தை தேடினோம். இந்த மேம்படுத்தப்பட்ட திறனாய்வின் சேர்க்கை விதிமுறைகளில், குறைவான வெளியேற்ற கூற்றின் காரணமாக ஏற்பட்ட இதய செயலிழப்பு (ஹார்ட் பெயிலியர் ரெட்யுஸ்டு யெஜக்ஷன் ப்ராக்க்ஷன், ஹட்ச்ஏப்ஆர்இஏப், HFREF அல்லது, 'சிஸ்டோலிக் ஹட்ச்ஏப்' 'systolic HF’) (வெளியேற்ற கூறு என்பது உங்கள் இதயம் எவ்வளவு நன்றாக உந்துவிசை கொண்டுள்ளது என்பதின் அளவு) மட்டுமல்லாது பாதுகாக்கப்பட்ட வெளியேற்ற கூற்றின் (ஹார்ட் பெயிலியர் பிரிஸ்எர்வ்டு யெஜக்ஷன் ப்ராக்க்ஷன், ஹட்ச்ஏப் பிஇஏப், HFPEF அல்லது 'டயஸ்டோலிக் ஹட்ச்ஏப்' 'diastolic HF') காரணமாக ஏற்பட்ட இதய செயலிழப்பையும் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தேடல் ஜனவரி 2013 வரை தற்போதையானது.

முக்கிய முடிவுகள்

4740 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 33 சீரற்ற சமவாய்ப்பு கட்டுப்பாடு சோதனைகளை நாங்கள் கண்டோம். இந்த மேம்படுத்தலின் கண்டுபிடிப்புகள், இந்த காக்குரேன் திறனாய்வின் முந்தைய (2010) பதிப்புடன் இசைவானதாக இருந்தது மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளாமையோடு ஒப்பிடுகையில் உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு இதய செயலிழப்பு காரணமான மருத்துவமனை அனுமதியின் ஆபாயத்தைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தர மேம்பாடுகள் போன்ற முக்கியமான நன்மைகளை காட்டுகின்றன. ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தரத்தில், ஆய்வுகளுக்கிடையே உயர் மட்ட மாறுபாடுகள் இருந்தது. பெரும்பாலான சான்று ஹட்ச்ஏப்ஆர்இஏப், HFREF கொண்ட மக்கள் மத்தியில் உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்விற்கு இருந்த போதும், இந்த மேம்படுத்தல் அதிக அபாயம் கொண்ட (நியூயார்க் இதய சங்கம்-வர்க்கம் IV) மற்றும் வயதான மக்கள், ஹட்ச்ஏப் பிஇஏப், HFPEF கொண்ட மக்கள், மற்றும் வீடு-சார்ந்த அடிப்படையில் நடைபெற்ற அதிக திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த சான்று அடித்தளத்தை அடையாளம் கண்டது. உடற்பயிற்சி பயிற்றுவிப்பு திட்டங்கள் குறுகிய அல்லது நீண்ட-காலக் கட்டத்தில் மரண அபாயத்தின் அதிகரிப்பு அடிப்படையில் தீங்கை ஏற்படுத்தும் என்று பரிந்துரைக்க எந்த சான்றையும் நாங்கள் காணவில்லை. உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு குறைந்த செலவு-திறன் கொண்டது என்பதை குறிப்பிட்ட ஒரு சிறியளவு பொருளாதார சான்று அடையாளம் காணப்பட்டது. ஹட்ச்ஏப் பிஇஏப், HFPEF கொண்ட மக்களில், உடற்பயிற்சி பயிற்றுவிப்பின் விளைவைப் பற்றி புரிந்துக் கொள்ளவும் மற்றும் பிரத்தியேகமாக வீடு-சார்ந்த உடற்பயிற்சி மறுவாழ்வுத் திட்டங்களின் விளைவுகள் மற்றும் செலவுகள் பற்றி புரிந்துக் கொள்ள மேற்படியான சான்று தேவைப்படுகிறது.

சான்றின் தரம்

சேர்க்கப்பட்டிருந்த சோதனை அறிக்கைகளில், செயல்முறையியல் பற்றிய அறிக்கையின் பொதுவான பற்றாக்குறையால், செயல்முறையியல் தரம் மற்றும் அவற்றின் சாத்திய ஒருதலைச் சார்பு அபாயத்தை மதிப்பிடுவது கடினமாக்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.