உடைந்த மணிக்கட்டை உடைய பெரியவர்களுக்கான சிகிச்சையின் பகுதியாக புனர்வாழ்வு

பின்புலம் மற்றும் நோக்கம்

குறிப்பாக வயதான பெண்களில், மணிக்கட்டு உடைதல் (இரண்டு முழங்கை எலும்புகளில் ஒன்றின் கீழ் இறுதியில் ஒரு எலும்பு முறிவு கொண்ட) கையை நீட்டியபடி வீழ்வதால் விளையலாம். இதற்கு வழக்கமான சிகிச்சை , எலும்புத் துண்டுகள் மோசமாக இடம் பெயர்ந்தது என்றால் எலும்புத் துண்டுகளை மீண்டும் அதற்குரிய இடத்தில் வைப்பது ,மற்றும் மணிக்கட்டை ஒரு சுண்ணச்சாந்து கட்டில் முடக்குதலையும் உள்ளடக்கும். மிகவும் மோசமாக விலகியிருக்கும் எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை கருத்தில் கொள்ளப்படும். உடற்பயிற்சிகள் மற்றும் பிற இயன்முறை தலையீடுகள் கொண்ட புனர்வாழ்வு, மூட்டு விறைப்பு மற்றும் வலி போன்ற பக்க விளைவுகள் வராமல் தடுக்கவும், செயல்பாடு மீட்டல் மற்றும் மீட்பை வேகப்படுத்தலுக்கும் உதவ பயன்படுத்தப்படுகின்றன.

இந்த எலும்பு முரிவை குணப்படுத்துவதில் வெவ்வேறான புனர்வாழ்வு தலையீடுகளின் விளைவுகளை மணிக்கட்டு செயல்பாட்டின் மேல்அறிய இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது.

தேடல் முடிவுகள்

ஜனவரி 2015 வரையான அறிவியல் இலக்கியத்தை நாங்கள் தேடி, முக்கியமாக 1269 பெண்கள் மற்றும் வயதான நோயாளிகள் கொண்ட 26 சமவாய்ப்பு கட்டுப்பாடு சோதனைகளை நாங்கள் கண்டோம். இந்த 26 ஆய்வுகளில் அடங்கிய 23 சிகிச்சை ஒப்பீடுகளில் நான்கை மட்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகள் சோதித்தன. 15 ஆய்வுகளில் இருந்த பங்கேற்பாளர்கள், சுண்ணச்சாந்து கட்டில் முடக்குதல் கொண்டு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டனர். 11 ஆய்வுகளில் இருந்த சில அல்லது அனைத்து பங்கேற்பாளர்கள், அறுவை சிகிச்சை கொண்டு சிகிச்சை அளிக்க பட்டனர். 7 ஆய்வுகளில், மணிக்கட்டு முடக்குதலின் போது புனர்வாழ்வு சிகிச்சை தொடங்கப்பட்டது. பிற 19 ஆய்வுகளில், கட்டு நீக்கப்பட்ட பிறகு, புனர்வாழ்வு சிகிச்சை தொடங்கப்பட்டது.

அனைத்து ஆராய்ச்சிகளும் சிறியதாகவும் மற்றும் முடிவுகளின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகவும் இருந்தது. பெரும்பாலான ஆராய்ச்சிகள் செயல்பாடு பற்றிய பங்கேற்பாளர்கள் தெரிவிக்கும் விளைவுகளை குறிப்பிடவில்லை மற்றும் போதுமான காலம் வரை பின் தொடரவில்லை. நாங்கள் வெளியிடப்பட்ட ஆதாரங்களை குறைவான அல்லது மிக குறைவான தரமுடையவை என்று தீர்மானித்தோம். ஆகையால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முடிவுகள் உண்மையானது என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.

முக்கிய முடிவுகள்

தலையீடுகள் முடக்குதலின் போது தொடங்கப்பட்டது
இரண்டு ஆய்வுகள், புனர்வாழ்வு (கை சிகிச்சை அல்லது பணி சார்ந்த சிகிச்சை ) கையின் செயல்பாடுகளை கட்டு நீக்கப்பட்டவுடன் மேம்படுத்தியதற்கு மிக குறைந்த தரமுடைய சான்றுகளை வழங்கியது.ஆனால் அது நீண்ட காலம் இல்லை .ஒரு ஆராய்ச்சி , விளைவுகள் மேற்பார்வையில் பயிற்சி செய்வதற்கும் மேற்பார்வையில்லாமல் பயிற்சி செய்வதற்கும் வேறுபாடு இல்லை என்பதற்கு மிக குறைந்த தரமுடைய சான்றை தந்தது. நான்கு ஆராய்ச்சிகள் ,வழக்கமான சிகிச்சையுடன் நான்கு வெவ்வேறு தனித்தனி வகையான புனர்வாழ்வு சிகிச்சைகள் சிறிது பயனளிப்பதாக மிக குறைந்த தரமுடைய சான்றுகளை தந்தன.

தலையீடுகள் முடக்குதலுக்கு பின்,குறிப்பாக கட்டு நீக்கப்பட்டவுடன் தொடங்கியது
ஒரு ஆய்வில் இருந்து, ஒரு பொழுது இயன்முறை சிகிச்சை முக்கியமாக வீட்டு பயிற்சிக்கான அறிவுரைகள் மற்றும் அறிவுறுத்தல்கள், சிகிச்சை ஏதும் இல்லாததோடு ஒப்பிடும்போது செயல்பாட்டை மேம்படுத்தியதற்கு மிக குறைந்த தரமுள்ள ஆதாரங்கள் இருந்தன. நான்கு மிகவும் வேறுபட்ட ஆய்வுகளில் இருந்து இயன்முறை மருத்துவர்களிடம் இருந்து பெறும் வீட்டு பயிற்சிகளுக்கான வழிமுறைகளுக்கு எதிராக வழக்கமான இயன்முறை சிகிச்சை அல்லது தொழில் சிகிச்சையுடன் கூடுதலாக வீட்டு பயிற்சிகளுக்கான வழிமுறைகள் பெறும் நோயாளிகளுக்கு விளைவுகளில் மருத்துவரீதியான முக்கிய வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதற்கு தரம் குறைந்த ஆதாரங்கள் உள்ளன. அறுவை சிகிச்சை நிபுணர் அறிவுறுத்தும் வீட்டு பயிற்சிகளுக்கான வழிமுறைகள் (ஒரு ஆய்வு) அல்லது ஒரு முன்னேறுகிற வீட்டு உடற்பயிற்சி திட்டத்தை (ஒரு ஆய்வு) ஒப்பிடும்போது இயன்முறை சிகிச்சை கொடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு நல்ல குறுகிய கால கை செயல்பாடு மேம்பட்டதற்கு மிகவும் தரம் குறைந்த ஆதாரங்கள் உள்ளன. இரண்டு ஆய்வுகளும் தகடு பொருத்துதல் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு (உடைந்த எலும்பை இடத்தில் வைக்க ஒரு உலோக தகடு மற்றும் திருகுகள் பயன்படுத்தப்படும்) பிசியோதெரபி அல்லது தொழில் சிகிச்சைக்கு எதிராக ஒரு முற்போக்கான வீட்டு உடற்பயிற்சி திட்டத்தை ஒப்பிட்டு ஒரு கட்டமைக்கப்பட்ட வீட்டு பயிற்சிகள் திட்ட வழிமுறைகளை அல்லது பயிற்சியை தொடர்ந்து செய்வதற்கு ஆதரவாக குறைந்த தர சான்றை கண்டறிந்தது. . ஒரு ஆய்வு தகடு பொருத்துதல் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு முடுக்கப்பட்ட புனர்வாழ்வை வழக்கமான புனர்வாழ்வுடன் ஒப்பிடுகையில் ஒரு குறுகிய கால, ஆனால் தொடர்ந்து நீடிக்காத பயனுள்ளதாக, தரம் குறைந்த சான்றை வழங்கியது.

கட்டு பிரித்தபின் பயன்படுத்தப்படும் ஒற்றை தலையீடுகளை பரிசோதித்த ஆய்வுகளுக்கு , செயலற்ற இயக்கம் , பனிகட்டி சிகிச்சை , துடிப்பு மின்காந்த புலம் (PEMF), PEMF உடன் பனிக்கட்டி சிகிச்சை , நீர்ச்சுழியில் மூழ்கு வித்தல் , மற்றும் விறைப்பான மணிக்கட்டை உடைய நோயாளிகளுக்கு ஒரு மாறும் நீட்டிப்பு சிம்புகட்டு ஆகிய சிகிச்சைகளை எந்த ஒரு தலையீடும் பெறாத நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் விளைவுகளில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவ வேறுபாடுகளும் இல்லை என்பதற்கு மிகவும் தரம் குறைந்த சான்றுகள் இருந்தன. இந்த கண்டுபிடிப்பு பனிசிகிச்சைக்கு எதிராக PEMF ஒப்பிட்ட ஒற்றை ஆய்வுகள், மற்றும் வீக்கத்திற்கான ஒரு புதிய வகை மசாஜ் சிகிச்சையை பாரம்பரிய அணுகுமுறையுடன் ஒப்பிட்ட ஆய்வுகளுக்கும் பொருந்தும். ஒரு ஆய்வில் இருந்து வெளி பொருத்துதல் அகற்றிய பின்னர் உடனடியாக தொடர்ச்சியான செயலற்ற இயக்கம், இடைப்பட்ட வாயு சுருக்க சிகிச்சை மற்றும் செவியுணரா ஒலி சிகிச்சை (அல்ட்ராசவுண்ட் சிகிச்சை)யின் குறுகிய கால நன்மைக்கு தரம் குறைந்த ஆதாரங்கள் இருந்தன.

முடிவுரைகள்

மணிக்கட்டு எலும்பு முரிவிற்கு தலை சிறந்த புனர்வாழ்வு எது என்பதை முடிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நாங்கள் முடிவு செய்தோம். மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன் முன்னுரிமை கேள்விகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: கா.அழகுமூர்த்தி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information