கீழ்முதுகு டிஸ்க் பிங்கல் அறுவை சிகிச்சைகுப் பின் புனர்வாழ்வு

திறனாய்வு கேள்வி

கீழ்முதுகு டிஸ்க் அறுவை சிகிச்சைகுப் பின் வேலைக்கு செல்லுதல், செயல்பாட்டு திறன், மீட்டெழல் மற்றும் வலி போன்றவற்றில் புனர்வாழ்வு திட்டங்களின் திறன்களின் ஆதாரங்களை நங்கள் திறனாய்வு செய்தோம்.

பின்னணி

கீழ் முதுகில் உள்ள நரம்பு அழுத்தம் அல்லது நெரித்தலால் உண்டாகும் கால் வலிக்கு பொதுவான காரணமாக பிங்கல் அல்லது நழுவிய டிஸ்க் கருதப்படுகிறது. பல நோயாளிகள் இயன்முறை மருத்துவம் அல்லது மருந்துகள் போன்ற அறுவை சிகிச்சை அல்லாத நடவடிக்கைகளால் சிகிச்சையளிகப்படுகிரார்கள் தொடர்ச்சியாக அறிகுறிகள் உள்ள நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தலாம். 78% முதல் 95% நோயாளிகள்அறுவை சிகிச்சைக்கு பின் மேம்பாடு அடைவர், சிலர்க்கு அவர்களுடைய அறிகுறிகள் தொடர்து இருக்கும். டிஸ்க் அறுவை சிகிச்சை கொண்ட நோயாளிகளுக்கு 3% முதல் 12% மீண்டும் மீண்டும் அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் பெரும்பாலான நோயாளிகளுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 

அறுவை சிகிச்சைகுப்பின் புனர்வாழ்வு  இயன்முறை மருத்துவர் முலம் உடற்பயிற்சி சிகிச்சை

ஆய்வு பண்புகள்

இந்த மேம்படுத்தப்பட்ட ஆய்வு முதல் முறையாக டிஸ்க் அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு பல்வேறு மறுவாழ்வு திட்டங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தது.18 முதல் 65 வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ள 2503 பங்கேற்பாளர்களை கொண்ட 22 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை நங்கள் இதில் உள்ளடக்கினோம். இந்த ஆதாரம் மே 2013 வரை நிலவரப்படியானது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அறுவை சிகிச்சைகப் பின் இரண்டு மணிநேரம் முதல் 12 மாதங்கள் வரை சிகிச்சை தொடங்கிய காலமாக இருந்தது. சிகிச்சையின் உள்ளடக்கம், வைத்திய காலம் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றில் கணிசமான மாறுபாடு போன்றவை குறிக்கப்பட்டது (உதரணமாக உடற்பயிற்சி திட்டங்கள்) சிகிச்சை நீடிக்கும் காலம் இரண்டு வாரம் முதல் ஒருவருடம் வரை இருந்தது; பெரும்பாலான புனர்வாழ்வு திட்டங்கள் ஆறு முதல் 12 வாரம் வரை இருந்தன. நோயாளிகள் பொதுவாக வலி தீவிரத்தை கடுமையானது என்று தெரிவித்தனர்(பூஜ்ஜியம் முதல் 100 புள்ளிகளில்லான அளவுகோலில் 56 புள்ளிகள், மோசமான வலிக்கு 100புள்ளிகள். பொதுவாக ஆய்வுகள் ஒப்பிட்டது: (1) உடற்பயிற்சி அல்லது சிகிச்சை பெறாதோர் (2) அதி-தீவிர அல்லது குறைந்த தீவிர உடற்பயிற்சி (3) கண்காணிக்கப்பில் செய்யப்படும் உடற்பயிற்சி அல்லது வீட்டில் செய்யும் உடற்பயிற்சி, பொதுவாக அறுவை சிகிச்சை குப் பின் நான்கு முதல் ஆறுவாரங்கள் கழித்து. இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்ட ஒப்பிடுகள்: (1) உடற்பயிற்சி அல்லது சிகிச்சை பெறாதோர் (2) அதி-தீவிர அல்லது குறைந்த தீவிர உடற்பயிற்சி (3) கண்காணிக்கப்பட்ட அல்லது விடில் செய்யும் உடற்பயிற்சி

முக்கிய முடிவுகள்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு உடற்பயிற்ச்சி செயல்திட்டங்களில் பங்குபெற்ற நோயாளிகள் பங்குபெராதவர்களை காட்டிலும் சற்று குறைவான குறுகிய கால வலி மற்றும் இயலாமை ஆகியவற்றைக் கண்டறிந்தனர். உயர்-தீவிர உடற்பயிற்சி திட்டங்களில் பங்குபெற்றவர்கள் குறைந்த தீவிர உடற்பயிற்சி திட்டங்களில் பங்குபெற்றவர்களை விட குறிகிய காலத்தில் வலி மற்றும் இயலாமையை சற்ற குறைவாக தெரிவித்தனர். மேற்பார்வை உடற்பயிற்சி திட்டங்களில் உள்ள நோயாளிகள் வீட்டில் உடற்பயிற்சி திட்டங்களுடன் ஒப்பிடும் போது, வலி மற்றும் இயலாமை ஆகியவற்றில் குறைவான அல்லது எந்த வித்தியாசத்தையும் தெரிவிக்கவில்லை. உயர் தர ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இங்கு ஒரு முடிவுக்கு வர கடினமாக உள்ளது.

எந்த ஆய்வுகளும் முதல் லாம்பர் அறுவை சிகிச்சைக்குப் பின் மறு அறுவை சிகிச்சை வீதங்கள் அதிகரித்தது என்று தெருவிக்கவில்லை.

அனைத்து நோயயளிகளுகும் அறுவை சிகிச்சை முடித்தவுடன் சிகிச்சை அளிக்கப் படவேண்டுமா அல்லது நான்கு அல்லது ஆறு வாரங்களுக்கு பிறகும் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப் படவேண்டுமா என்று ஆதாரங்கள் காண்பிக்க வில்லை.

ஆதாரங்களின் தரம்

எனவே, திறனாய்வின் முடிவுகளை எச்சரிக்கையுடன் பொருள் கொள்ள வேண்டும். பொதுவாக அனைத்து சிகிச்சைகளும் ஒரு ஆய்வில் மட்டுமே சோதிக்கப்பட்டது. எனவே பெரும்பாலான தலையீடுகளுக்கு, குறைவான- மிக குறைந்த தர சான்றுகள், அவற்றின் செயல்திறனைப் பற்றி உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information