பக்கவாதத்தைத் தொடர்ந்த கவனக் குறைப்பாடுகளுக்கான புலனறிவு புனர்வாழ்வு

பக்கவாதத்தைத் தொடர்ந்து அநேக மக்கள் கவனம் செலுத்துவதில் பிரச்னைகளை கொண்டிருப்பர். சவால் மிகுந்த சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட செயலில் கவனம் செலுத்த முடியாத வகையில் நீண்ட நேரங்களுக்கு கவனத்துடன் இருக்க முடியாமலும் மற்றும் எளிதாக திசை திருப்பபடும்படியாகவும் இருப்பர். மூளை பாதிப்பைத் தொடர்ந்த கவனக் குறைப்பாட்டின் தீவிரத்தை குறைப்பதற்கு சிகிச்சை ரீதியான நடவடிக்கைகளை அளிப்பதை புலனறிவு புனர்வாழ்வு உள்ளடக்கும். பக்கவாதத்தைத் தொடர்ந்த கவனக் குறைப்பாடுகளுக்கான புலனறிவு புனர்வாழ்வின் நன்மை பற்றி தெளிவாக தெரியவில்லை. கவனம் செலுத்துதல், அன்றாட இயக்கம் சார்ந்த நடவடிக்கைகள், மனநிலை மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் மீது புலனறிவு புனர்வாழ்வின் விளைவை திறனாய்வு செய்வதே எங்களின் நோக்கமாகும். கவனக் குறைப்பாடுகள் கொண்ட மக்களில், கட்டுப்பாட்டு குழுவின் வழக்கமான பராமரிப்போடு புலனறிவு புனர்வாழ்வை ஒப்பிட்ட ஆறு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் அடையாளம் கண்டோம். இந்த ஆறு ஆய்வுகள் 223 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியிருந்தன. சிகிச்சையின் முடிவு காலத்தில், வகுக்கப்பட்ட கவனத்தின் மீது புலனறிவு புனர்வாழ்வின் குறிப்பிடத் தகுந்த விளைவை நாங்கள் கண்டோம். எனினும், இந்த நன்மைகள் மேலும் நீடித்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கூடுதலாக, பிற வகையான கவனக் குறைப்பாடுகளில் புலனறிவு புனர்வாழ்வின் விளைவை ஆதரிக்க அல்லது மறுக்க எந்த ஆதாரமும் இல்லை. இயக்கம் சார்ந்த நடவடிக்கைகள், மனநிலை அல்லது வாழ்க்கைத் தரம் மீது எந்த விளைவும் இல்லை. அடையாளம் காணப்பட்ட சோதனைகளின் செயல்முறையியல் தரம் மற்றும் மிக குறைவான ஆய்வுகள் என்பதின் அர்த்தம், கவனக் குறைப்பாட்டிற்கு புலனறிவு புனர்வாழ்வின் விளைவு பற்றிய முடிவுகளை வகுக்க எங்களால் இயலாது என்பதாகும். அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. கவனக் குறைப்பாடுகள் கொண்ட மக்கள், பக்கவாத புனர்வாழ்வு சேவைகளை தொடர்ந்து பெற வேண்டும். ஆனால், புலனறிவு புனர்வாழ்வின் குறிப்பிட்ட விளைவுகளை அடையாளம் காண அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information
Share/Save