கடுமையான பக்கவாதத்திற்கு இரத்தக் குழாய் குழல் இயக்கி மருந்துகள்

மிகவும் உயர்ந்த மற்றும் மிகக் குறைந்த இரத்த அழுத்தம் தற்போதுதான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு (இது திடீரென மூளையின் ரத்தநாளங்களில் ஏற்படும், அடைப்பினாலோ அல்லது மூளையின் ரத்த நாளங்களிலோ அல்லது மூளைக்கு செல்லும் ரத்தநாளங்களிலோ உண்டாகும் வெடிப்பு மற்றும் ரத்தக்கசிவினால் ஏற்படுவதாகும்) தீங்கு விளைவிக்க கூடும். கடுமையான பக்கவாத நோயாளிகளுக்கு குறைந்த இரத்த அழுத்தத்தை உயர்த்தும் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் பயனளிக்கும். 7649 பங்கேற்பாளர்கள் கொண்ட, 43 மருத்துவ ஆராய்சிகளை உள்ளடக்கிய இந்த திறனாய்வில் இரத்த அழுத்தத்தை மாற்றவியலும் மருந்துகள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தலாமா அல்லது பயன்படுத்தக் கூடாதா என்பதை முடிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்

Tools
Information