ஆன்கைலோசிங் ஸ்போன்டிலைடிஸ்ற்கான இயன் முறை சிகிச்சை

ஆன்கைலோசிங் ஸ்போன்டிலைடிஸ்ற்கான இயன் முறை சிகிச்சை எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது மேலும் அது எவ்வளவு பாதுகாப்பானது? இந்த கேள்விக்கு பதிலளிக்க, காக்குரேன் தசையெலும்பு குழுவோடு (மஸ்குலோ-ஸ்கெலிட்டல் க்ரூப்) பணிபுரியும் விஞ்ஞானிகள் 700 ஆன்கைலோசிங் ஸ்போன்டிலைடிஸ் (ஏஎஸ்) கொண்ட மக்களை சோதித்த 11 ஆய்வுகளைக் கண்டுபிடித்து பகுப்பாய்வு செய்தனர். வீட்டில் உடற்பயிற்சி செய்த மக்கள், குழு உடற்பயிற்சி திட்டங்களுக்கு சென்றவர்கள், ஆரோக்கிய நீருற்று (ஸ்பா) அல்லது குளியல் மருத்துவத்திற்கு சென்றவர்கள், பல்வேறு உடற்பயிற்சி திட்டங்களை மேற்கொண்டவர்கள் அல்லது எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாதவர்கள் ஆகியோரை இந்த ஆய்வுகள் ஒப்பிட்டன. இந்த ஆய்வுகள் இன்றளவு நம்மிடம் உள்ள சிறந்த சான்றை தருகின்றன.

ஆன்கைலோசிங் ஸ்போன்டிலைடிஸ் என்றால் என்ன மற்றும் இயன் முறை சிகிச்சை எவ்வாறு உதவ முடியும்?ஆன்கைலோசிங் ஸ்போன்டிலைடிஸ் என்பது முதுகெலும்பின் மூட்டுகள் மற்றும் தசைநார்களைக் குறிப்பாகத் தாக்கும் ஒரு வகையான கீல்வாதமாகும், மற்றும் பல்வேறு அளவிலான வலி, மூட்டு விறைப்பு மற்றும் இயலாமையை விளைவிக்கக் கூடியதாகும். முதுகெலும்பின் இயக்கத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்தவும், உடற்திறனை மேம்படுத்தவும் மற்றும் வலியைக் குறைக்கவும் இயன் முறை சிகிச்சை ஒரு முக்கியமான சிகிச்சை முறையாக விளங்குகிறது.

இயன் முறை சிகிச்சை எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது? நான்கு ஆய்வுகள், தனிநபர் அல்லது கண்காணிக்கப்பட்ட உடற்பயிற்சிகளை சிகிச்சையின்மையோடு ஒப்பிட்டன. சிகிச்சையின்மையைக் காட்டிலும் தனிநபர் மற்றும் கண்காணிக்கப்பட்ட உடற்பயிற்சிகள் இரண்டும் முதுகெலும்பின் இயக்கத்தை மேம்படுத்தின என்று இவ்வாய்வுகள் கண்டுபிடித்தன. உடற்பயிற்சி திட்டங்கள் இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை கடைபிடிக்கப்பட்டன.மூன்று ஆய்வுகள், வீட்டிலிருந்தபடி செய்யப்பட்ட உடற்பயிற்சிகளை கண்காணிக்கப்பட்ட குழு உடற்பயிற்சிகளோடு ஒப்பிட்டன. குழு உடற்பயிற்சிகள் முதுகெலும்பின் இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தியது, ஆனால் வீட்டிலிருந்தபடியே செய்யப்பட்ட பயிற்சிகளை காட்டிலும் சுயமாக அறிக்கையிட்ட உடல் செயல்பாட்டில் அதிகமான மேம்பாட்டை ஏற்படுத்தவில்லை என்று இந்த ஆய்வுகள் கண்டறிந்தது. உடற்பயிற்சிகள் மூன்று வாரங்கள் முதல் ஒன்பது மாதங்கள் வரை கடைபிடிக்கப்பட்டது, மற்றும் வலுப்படுத்தல், ஏரோபிக் (சீருடல் உறுதி) உடற்பயிற்சிகள், நீர்-சார்ந்த உடற்பயிற்சி, விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் தசை நீட்சி ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தன.ஒரு ஆய்வு, 10 மாதங்களாக வாராந்திர குழு உடற்பயிற்சிகளை செய்த இரண்டு குழுக்களை ஒப்பிட்டது. ஆனால் அக்குழுக்களில் ஒன்று, மூன்று வார இயன் முறை சிகிச்சைக்காக ஒரு ஆரோக்கிய நீருற்று ஓய்வகத்திற்கும் சென்றனர். வெறும் வாராந்திர குழு உடற்பயிற்சியைக் காட்டிலும், ஆரோக்கிய நீருற்று சிகிச்சையுடன் கூடிய வாராந்திர குழு உடற்பயிற்சியானது வலி மற்றும் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தியது. ஒரு ஆய்வு, குளியல் மருத்துவம் மற்றும் தினசரி பயிற்சிகளை வெறும் தினசரி பயிற்சிகளோடு ஒப்பிட்டது, மற்றும் இன்னொரு ஆய்வு குளியல் மருத்துவத்தை நன்னீர் சிகிச்சையோடு ஒப்பிட்டது. இந்த இரண்டு ஆய்வுகளும் சிகிச்சைக்கு பிற்பாடு, பல்வேறு விளைவுகளில் மேம்பாடுகளைக் காட்டியது, ஆனால் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படவில்லை. மற்றொரு ஆய்வு, ஒரு நான்கு மாத சோதனை உடற்பயிற்சி திட்டத்தை ஒரு வழக்கமான திட்டத்தோடு ஒப்பிட்டது. இரண்டு குழுக்களும் முன்னேற்றம் அடைந்தன, ஆனால் வழக்கமான உடற்பயிற்சி குழுவை விட சோதனை உடற்பயிற்சி குழு முதுகெலும்பு இயக்கம் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவற்றில் மிகவும் மேம்பட்டது.

இயன் முறை சிகிச்சை நோயாளிகளுக்கு தீங்களித்ததா?நோயாளிகளுக்கு ஏற்பட்ட தீங்குகளைப் பற்றி ஆய்வுகளில் பதிவு செய்யப்படவில்லை.

அடித்தள அர்த்தம் என்னவாக இருக்கிறது?ஆன்கைலோசிங் ஸ்போன்டிலைடிஸ் கொண்ட மக்களுக்கு இயன் முறை சிகிச்சை அல்லது உடற்பயிற்சிகள் பயனுள்ளதாக உள்ளது.

"வெள்ளி" நிலை ஆதாரங்களானது (www.cochranemsk.org), உடற்பயிற்சியின்மையை விட வீடு-சார்ந்த அல்லது கண்காணிக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டங்கள் சிறந்தவை என்பதற்கும் மேலும் இயக்கம் மற்றும் உடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்பதற்கும் உள்ளன. வீட்டு உடற்பயிற்சிகளை விட குழு உடற்பயிற்சிகள் சிறந்ததாகவும் மேலும் இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்த வல்லதாகவும் இருக்கிறது. வாராந்திர குழு உடற்பயிற்சிகளோடு ஒரு ஆரோக்கிய நீருற்று ஓய்வகத்தில் சில வாரங்கள் செய்யப்படும் உடற்பயிற்சியையும் கூட்டிக் கொள்ளுதல் வெறும் வாராந்திர குழு உடற்பயிற்சிகளை விட மேலானது. உடற்பயிற்சி திட்டத்தோடு சேர்க்கப்பட்ட குளியல் மருத்துவமோ, அல்லது நன்னீர் சிகிச்சையோடு ஒப்பிடப்பட்ட குளியல் மருத்துவமோ எந்த கூடுதலான விளைவையும் காட்டவில்லை. வழக்கமான உடற்பயிற்சிகளை விட ஒரு சோதனை உடற்பயிற்சி திட்டம், இயக்கம் மற்றும் உடல் செயல்பாட்டில் மேலான முன்னேற்றத்தை காட்டியது, ஆனால் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க புள்ளியியல் வேறுபாடுகள் இல்லை. பல்வேறு வகையான இயன் முறை சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி பற்றியும் மற்றும் மிகுந்த முன்னேற்றத்திற்கு எவ்வளவு காலம், எவ்வளவு தீவிரம் மற்றும் எவ்வளவு தடவை இயன் முறை சிகிச்சை தேவைப்படும் என்பதை பற்றியும் இன்னும் அதிகமான தகவல் நமக்கு தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information