பார்க்கின்சன் நோய் கொண்டவர்களுக்கு தொழில்வழி சிகிச்சையின் விளைவுகளை மதிப்பீடு செய்ய ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை.

பார்கின்சன் நோய் ஒரு தீவிரமாகி வரும் முடக்கு நரம்புச்சிதைவு நோயாகும். மெதுவாகவும், விறைப்பாகவும்,ஸ்திரமற்ற நிலையிலும் இருத்தல் போன்ற இயக்க பிரச்சனைகள் மற்றும் மனநிலை, பேச்சு தொடர்பு, பார்வை மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் போன்ற இயக்கங்கள் அல்லா பிரச்சனைகள் ஆகியவை நோய் அறிகுறிகள் ஆகும். பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் முடிந்தவரை அவர்களின் சுய பேணுகை, வேலை மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளை ஊக்குவித்தல் போன்றவை தொழில் முறை சிகிச்சையாளர்களின் பங்கு ஆகும் . பார்க்கின்சன் நோய் கொண்டவர்களுக்கு தொழில்வழி சிகிச்சையின் விளைவுகளை பற்றிய சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனையில் இருந்து பெற்ற ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information