வேலை செய்யும் வயதில் உள்ள பெரியவர்கள் மத்தியில் கழுத்து மற்றும் தோள்பட்டை வலிக்கு பல்முனை உயிர் உளச்சமூகவியல் (biopsychosocial) புனர்வாழ்வு

கழுத்து மற்றும் தோள்பட்டை வலிக்கு பல்முனைத் உயிர் உளச் சமூகவியல் புனர்வாழ்வு உதவுமா அல்லது உதவாத என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

நீண்ட காலமாக இருக்கும் கழுத்து மற்றும் தோள்பட்டை வலி, உடல், உளவியல் மற்றும் சமூக இன்னல்களை ஏற்படுத்தலாம். அந்த காரணத்திற்காக, உடற்சார்ந்த புனர்வாழ்வு, உளவியல், நடத்தை மற்றும் கல்வி தலையீடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். சில வலி மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்களிலும், வெளிநோயாளிகளுக்கான புனர்வாழ்வாகவும் இது போன்ற பல்முனைத் புனர்வாழ்வு அளிகப்படுகிறது. வேலைக்குச் செல்லும் வயது உடைய பெரியவர்களுக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை வலிக்கு பல்முனை உயிர் உளச் சமூகவியல் புனர்வாழ்வு உதவுமா அல்லது உதவாத என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information