நாள்பட்ட கீழ்முதுகுவலிக்கு நடத்தைசார் சிகிச்சை (Behavioural treatment)

கீழ்முதுகுவலி உலகம் முழுவதுமுள்ள மக்களைப் பாதிக்கின்ற ஒரு முக்கிய சுகாதார மற்றும் பொருளாதாரப் பிரச்சனையாகும். விசேடமாக, நாள்பட்ட கீழ்முதுகுவலியானது மருத்துவ செலவுகள், வேலை வருகையின்மை, இயலாமை போன்றவற்றுக்கு ஒரு முக்கியமான காரணமாகும். நாள்பட்ட கீழ்முதுகுவலிக்கான தற்கால மேலாண்மையானது மருந்துகள், உடற்பயிற்சி மற்றும் நடத்தைசார் சிகிச்சை போன்ற வித்தியாசமான சிகிச்சை முறைகளை உள்ளடக்கியுள்ளது. நாள்பட்ட கீழ்முதுகுவலியின் போக்கில் சமூக வகிபாகங்கள் மற்றும் உளவியல் காரணிகள் பங்களிப்புச் செய்வதை ஆய்வுகள் காட்டியுள்ளன.

30 ஆய்வுகளை (3438 பங்கேற்பாளர்கள்) உள்ளடக்கிய இந்த மீளாய்வானது நாள்பட்ட கீழ்முதுகுவலிக்கான மூன்று நடத்தைசார் சிகிச்சைகளை மதிப்பிட்டது,: (i) இயக்குனர்சார் (வலியுடன் தொடர்புடைய வெளிப்புற காரணிகளால் அதனை அதிகரிக்க முடியும்என்பதை தெரிவிக்கின்றது) (ii) அறிவுசார் (எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கைகள், அல்லது இம் மூன்றினதும் சேர்க்கை என்பவற்றுடன் சம்பந்தப்படுகின்றது), (iii) பதிலளிப்பவர்சார்(அதிகரிக்கும் தளர்வாக்கல் நுட்பங்கள் அல்லது தசைச் செயற்பாட்டின் உயிரியல் பின்னூட்டம்என்பவற்றினால் தசை இழுவையில் குறுக்கீடு செய்கிறது).

வலிநிவாரணத்திற்கு மிதமான தரம் கொண்ட ஆதாரம் இருந்தது:

(i) குறுகிய காலப்பகுதியில், காத்திருப்புப் பட்டியலில் உள்ள கட்டுப்பாடு குழு நோயாளிகளை விட இயக்குனர்சார் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

(ii) குறுகிய அல்லது இடைநிலை காலப்பகுதியில் இயக்குனர்சார் சிகிச்சை, அறிவுசார் சிகிச்சை; அல்லது நடத்தைசார் சிகிச்சைகளின் ஒரு கலப்பு என்பவற்றுக்கிடையே சிறிய வித்தியாசமே இருந்தது அல்லது எந்த வித்தியாசமும் இன்றிக் காணப்பட்டது.

குறுகிய காலப்பகுதியில், நடத்தைசார் சிகிச்சையானது வழக்கமான பராமரிப்பைக்(வழக்கமாக உடற்பயிற்சிசார் சிகிச்சை, முதுகுவலி பற்றிய கற்பித்தல் செயற்பாடு, மற்றும் / அல்லது மருத்துவ சிகிச்சைகள்) காட்டிலும்கூடிய வினைத்திறனுடையதாக இருந்தது.

நீண்ட காலப்பகுதியில் வலிநிவாரணத்திற்கு அல்லது குறைவான அழுத்தநிலை அறிகுறிகளுக்கு நடத்தைசார் சிகிச்சை மற்றும் குழு உடற்பயிற்சி என்பற்றுக்கிடையே சிறிய வித்தியாசமே இருந்தது அல்லது எந்த வித்தியாசமும் இன்றிக் காணப்பட்டது. உள்நோயாளர் புனர்வாழ்வளிப்புக்காக நடத்தைசார் சிகிச்சையின் சேர்க்கையானது உள்நோயாளர் புனர்வாழ்வளிப்பு மட்டுக்குமான பாதிப்பை அதிகரிப்பதாக தோன்றவில்லை.

பெரும்பாலான ஏனைய ஒப்பீடுகளுக்கு இரண்டு அல்லது மூன்று சோதனைகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட குறைவான அல்லது மிகக் குறைவான தரமுடைய ஆதாரமே இருந்தது. செயல்பாட்டு இயலாமை அல்லது வேலைக்குத் திரும்புதல் மீதான நடத்தைசார் சிகிச்சையின் பாதிப்பு பற்றி தகவல்களை வழங்கும் மிகச்சில ஆய்வுகளே இருந்தன.

மேலதிக ஆராய்ச்சிகள், முடிவுகளின் மீதும் அவற்றின் மீதான எமது நம்பிக்கையின் மீதும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த அதிக சாத்தியம் உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். மற்றும் தனஞ்செயன் சஞ்சயன்

Tools
Information