கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு லூபெலுசோல் (Lubeluzole)

கடுமையான இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு லூபெலுசோல் (Lubeluzole) திறனானது அல்ல. பக்கவாதத்திற்கு பின் மூளையின் ஒரு பகுதியில் குறைந்த இரத்த ஓட்டம் ஏற்படும். பிறகு, கிளர்ச்சியூட்டும் அமினோ அமில நரம்பியல் கடத்திகள் (excitatory amino acid neurotransmitters) எனப்படும் ரசாயனங்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இந்த அதிகப்படியான ரசாயனம் சில மூளை செல்கள் சேதமடையவோ அல்லது இறக்கவோ காரணமாகிறது (நிரந்தர செல் சேதமானது பெருமூளை இரத்த ஒட்டத்தடையால் ஏற்படும் திசு இறப்பு என்று அழைக்கப்படுகிறது) . இந்த அமினோ அமிலங்களின் விளைவுகளை தடுக்கும் மருந்துகளால் பெருமூளையில் இரத்த ஒட்டத்தடையால் ஏற்படும் திசு இறப்புகளிளிருந்து பாதுகாக்க முடியும். எழுச்சியூட்டும் பாங்குடைய அமினோஅமில உற்பத்திதடுப்பானாகிய லூபெலுசோலின் (lubeluzole) திறனை முன்னிறுத்தி அறிவதே இந்த திறனாய்வின் நோக்கம். கடுமையான இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு பிறகு மரணத்தை தடுக்க மற்றும் அதனால் ஏற்படும் இயலாமையைக் குறைக்க மனிதர்களுக்கு லூபெலுசோல் பயனுடையது என்று திறனாய்வுசோதனைகள் கண்டு அறியவில்லை. மேலும், லூபெலுசோல் இதய கடத்தல் கோளாறுகளை ஏற்படுத்தலாம்

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information