மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கு (carpal tunnel syndrome) இடஞ்சார்ந்த கார்டிகோஸ்டெராய்டு ஊசி குறுகிய கால நன்மைக்கு திறனானது.

மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கு (carpal tunnel syndrome) இடஞ்சார்ந்த (local) கார்டிகோஸ்டெராய்டுகள் ஊசி, அறுவை சிகிச்சை அல்லாத ஒரு பொது சிகிச்சைமுறையாகும் . மணிக்கட்டு சிம்பு பயன்பாடு , செவியுணரா ஒலி சிகிச்சை மற்றும் அழற்சி நீக்கிகள், பிற அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகளுள் அடங்கும் . அறுவை சிகிச்சையும் திறன் வாய்ந்த சிகிச்சை முறை என்று அறியப்படுகிறது .ஊசி மூலம் மருந்து செலுத்தியதிலிருந்து ஒரு மாத காலம் வரை மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு அறிகுறிகளை போக்குவதில் இடஞ்சார்ந்த கார்டிகோஸ்டெராய்டுகள் ஊசி திறன்வாய்ந்தது என்று இந்த திட்டமிட்ட திறனாய்வு உறுதி செய்கிறது. வாய்வழி கார்டிகோஸ்டெராய்டுகளை விட இடஞ்சார்ந்த (local) கார்டிகோஸ்டெராய்டு ஊசி சிகிச்சைக்குப்பின் 3 மாதங்கள்வரை குறிப்பிடத்தக்க வகையில் பிணி சார்ந்த மேம்பாட்டை அதிகமாக அளிக்கிறது. இரண்டு இடஞ்சார்ந்த கார்டிகோஸ்டெராய்டுகள் ஊசி செலுத்துவதால் நோய் அறிகுறிகளில் மேற்கொண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. லேசான மற்றும் மிதமான மணிக்கட்டு குகை நோய்க்கான நன்மை மற்றும் எவ்வளவு காலத்திற்கு இடஞ்சார்ந்த கார்டிகோஸ்டீராய்டு ஊசி நலன் பயக்கும் என்று தீர்மானிக்க மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்

Tools
Information