மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கு (carpal tunnel syndrome) அறுவை சிகிச்சை ஒப்பிடு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

மணிக்கட்டு குகை வழியாக செல்லும் நடுநரம்பு (median nerve) அழுத்தப்படுவதால்மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு உண்டாகிறது. பொதுவாக கைகளில் கூரிய கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் வலி போன்றவற்றை இது உண்டுபண்ணும். இதன் சிகிச்சை சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. அமுக்க நீக்க அறுவை சிகிச்சையை சிம்பு (splint) அணிவது அல்லது கார்டிகோஸ்டெராய்டுகள் ஊசி போன்ற அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகளுடன் ஒப்பிடுவதே இந்த திறனாய்வின் நோக்கம். நான்கு ஆய்வுகள் கண்டறியப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டது. மூன்று ஆய்வுகள் மதிப்பீடுக்காக காத்திருக்கின்றன. ஆய்வு முடிவுகள் அறுவை சிகிச்சை அநேகமாக சிம்பு (splint) அணிவதை விட சிறந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கின்றன . ஆனால் ஸ்டீராய்டு ஊசியை விட சிறந்ததா என்பது தெளிவாக இல்லை . லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்