குயில்லன்- பார்ரே கூட்டறிகுறிக்கு கார்டிகோஸ்டிராய்டுகள்

திறனாய்வு கேள்வி

குயில்லன்- பார்ரே கூட்டறிகுறிக்கு மருந்தற்ற குளிகை (போலி மருந்து) அல்லதுஆதரவு கவனிப்பு மட்டும் அளித்தலோடு ஒப்பிடுகையில் கார்டிகோஸ்டெராய்டுகள் மீட்டெழல்லை துரிதப்படுத்துமா?

பின்னணி

குயில்லன்- பார்ரே நோய்க்குறியீடு ஒரு அசாதாரணமான முடக்குவாதம் நோய், பொதுவாக நரம்புகளின் தன்னுடல் தாக்குமை (ஆட்டோ இம்யூன்) வீக்கத்தால் ஏற்படும். அதனால் 25% நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக்கருவி வேண்டியதாக அமைந்துவிடுகிறது. சுமாராக 5% நோயாளிகள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர் மற்றும் 10% நோயாளிகள் தொடர்ந்து இயலாமையுடன் இருப்பர். கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் (ப்ரிடினிசோலன் போன்றவை) வீக்கத்தை குறைக்கும் அதன் படி, நரம்பு சேதத்தை குறைக்கலாம்.

ஆய்வு பண்புகள்

653 பங்கேற்பாளர்களை கொண்ட எட்டு மருத்துவ ஆராய்ச்சிகள் இருந்தன. எனினும், ஏழு புள்ளி இயலாமை அளவுக் கோலில் மாற்றம் காணப்பட்ட 587 பங்கேற்பாளர்கள் கொண்ட ஆறு ஆராய்ச்சிகள் மட்டுமே இந்த திறனாய்வின் முதன்மை விளைவுப் பயன் பற்றிய தகவல் அளித்தன. ஒரு ஆய்வுக்கு பக்ஸ்ட்டர் பயோசயின்ஸ் (Baxter Bioscience ) மூலமாகவும் ,நிதியுதவி இரு ஆய்வுகளுக்கு ஆராய்ச்சி சபைகள் (research councils) மூலமாகவும் ,ஒரு ஆய்விற்கு தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes of Health)மூலமாகவும், மற்ற ஆய்வுகளுக்கு தெரிவிக்கப்டாத ஆதாரங்கள் மூலமாகவும் நிதியுதவி இருந்தது.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றின் தரம்

மிதமான தரம் கொண்ட ஆதாரங்களின்படி, 6 ஆய்வுகளின் அவசியமான தகவல்களை ஒன்று திரட்டிய முடிவுகள் நான்கு வாரங்கள் கழித்து இயலாமை தரத்தில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடும் இல்லைஎன்று தெரிவிக்கிறது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அல்லது ஒரு வருடம் கழித்து இயலாமையுடன் உள்ளவர்கள் எண்ணிக்கை சதவிதத்தில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்று மிதமான தரம் கொண்ட ஆதாரம் கூறுகிறது. ஆய்வுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தமையால் இயலாமை பற்றிய ஆதாரம் நம்பத்தக்கதாக இல்லை இன்று நாங்கள் கருதினோம். வாய்வழி கோர்டிகோஸ்டெராய்டு உபயோகித்த, 120 பங்கேற்பாளர்கள் கொண்ட நான்கு சிறிய ஆராய்ச்சிகளில், மொத்தத்தில் கார்டிகோஸ்டிராய்டு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுக்கு, கார்டிகோஸ்டிராய்டு அளிக்கப்படாதவார்களை விட நான்கு வாரங்களுக்கு பிறகு கணிசமாக குறைவான முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆதாரத்தை மிக குறைந்த தரம் கொண்டவை என்று கருதினோம். அதேவேளையில், மொத்தம் 467 பங்கேற்பாளர்களைக் கொண்ட இரண்டு பெரிய ஆய்வுகள் சிரை வழி கார்டிகோஸ்டெராய்டுகள் அளிப்பது நான்கு வாரங்கள் கழித்து இயலாமையில் ஒரு சிறிய அளவில் முன்னேற்றம் அடைய செய்யும் என்று மிதமான தரம் கொண்ட ஆதாரம் கொண்ட தெரிவித்தது. ஆனால் இந்த முடிவுகள் எந்த ஒரு விளைவுவும் ஏற்படவில்லை என்று கூற வாய்ப்பை அளித்தது. மருந்தற்ற குளிகை அல்லது ஆதரவு சிகிச்சை எடுத்தக்கொண்டவர்களை விட கார்டிகோஸ்டெராய்டுகள் எடுத்துகொண்டுவர்களுக்கு நீரிழிவு நோய் பொதுவாக காணப்பட்டதை தவிர வேறு எந்த தீங்கு விளைதலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை. கார்டிகோஸ்டெராய்டுகளுக்கு யாவரும் அறிந்த தீய பக்க விளைவு உயர் இரத்த அழுத்தம் ஆகும், இருப்பினும் பங்கேற்பாளர்கள் இடையே அது எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்தது. கார்டிகோஸ்டிராய்டினால் பெரியளவில் நன்மை கிடைக்காததற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் நரம்புகளில் வீக்கம் குறைத்து நன்மை பயத்தாலும், தசைகளில் ஏற்படுத்தும் தீய விளைவுகள் அவற்றின் நன்மைகளுக்கு எதிர்ச்செய்கையாக அமைவதினால் இருக்கலாம்.

இந்த ஆதாரம் ஜனவரி 2016 நிலவரப்படியானது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information