திடீர் பக்கவாதத்திற்குக் குளிரூட்டல் சிகிச்சை

பக்கவாதம் என்பது , மூளையானது இரத்தம் மற்றும் பிராணவாய்வினை பெற்றுக்கொள்ளாததால் அல்லது உடைந்த குருதிக் குழாயிலிருந்து ஏற்படும் இரத்தப்போக்கினால் அது பாதிக்கப்படுவதால் மூளையின் ஒரு பகுதியானது முறைப்படி செயல்படாது போகும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும் .வெப்பநிலையைக் குறைக்கும் தலையீடுகள் பக்கவாதத்தின் போது மூளை திசுக்கள் சேதம் அடையாமல் பாதுகாக்க உதவலாம்.பக்கவாதம் ஏற்படும் நேரத்தில் அதிக உடல் வெப்பநிலையைக் கொண்டுள்ள நோயாளிகளுடன் ஒப்பிடும் போது குறைவான உடல் வெப்பநிலையைக் கொண்டுள்ள நோயாளிகளிடம் சிறப்பான வெளியீட்டங்கள் (Outcomes) இருந்தது என முந்தைய ஆய்வுகள் காண்பித்தன . .திறந்த இருதய அறுவைசிகிச்சை , இருதய செயலிழப்பிற்குப் பின்னரான நிலை மற்றும் பிறக்கும்போது பிராண வாய்வு குறைவால் அவதிப்பட்ட குழந்தைகள் என்பவற்றில் இறப்பு அல்லது இயலாமையைக் குறைக்க வெப்பநிலை குறைப்பு சிகிச்சை பயன்படுத்தப்படுகின்றது .முரண்பாடாக, விபத்துசார் மூளைப் பாதிப்பு உடைய நோயாளிகளில் வெப்பநிலை குறைப்பு சிகிச்சையின் சிகிச்சைசார் பாதிப்பானது குறைந்தளவு நம்பிக்கையளிப்பதாகவே உள்ளது .அதன் இயலுமான நன்மை தரும் விளைவுகளுக்கு அப்பால் , வெப்பநிலை குறைப்பு சிகிச்சையானது மார்பு தொற்றுக்கள், நாளக் குருதியுறைவு அல்லது இருதய துடிப்புப் பிரச்சனைகள் உள்ளடங்கலான தீய விளைவுகளைக் கொண்டிருக்க கூடும் .இந்த மீளாய்வானது, கடுமையான பக்க வாத நோயாளிகளில் வெப்பநிலை குறைப்பு சிகிச்சையின் இயலுமான நன்மைகள் மற்றும் ஆபத்துக்களை மதிப்பீடு செய்வதை நோக்காகக் கொண்டிருந்தது. .கடுமையான பக்கவாத நோயாளிகளில் வழக்கமான மருத்துவ மேலாண்மையுடன், கடுமையான பக்கவாதத்தில் உடல்சார் அல்லது மருந்தியல்சார் வெப்பநிலை குறைப்பு சிகிச்சைகளின் பயன்பாட்டை ஒப்பிட்ட அனைத்து ஆய்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.உடல்சார் வெப்பநிலை குறைக்கும் தொழில் நுட்பங்கள், குளிரவைக்கும் போர்வைகள், குளிரவைக்கும் திரவங்கள் , குளிரவைக்கும் தலைக்கவசங்கள் மற்றும் ஏனைய கருவிகளை உள்ளடக்கியுள்ளன.மருந்தியல்சார் வெப்பநிலை குறைக்கும் தலையீடுகள் வெப்பநிலையைக் குறைக்க உபயோகிக்கும் மருந்துகளை உள்ளடக்கியுள்ளன.கடுமையான பக்கவாதம் ஏற்பட்ட 423 பங்குபற்றுனர்கள் பங்கேற்ற ஐந்து மருந்தியல்சார் மற்றும் மூன்று உடல்சார் வெப்பநிலை குறைப்பு சோதனைகளின் முடிவுகள் மருத்துவரீதியான நன்மையையோ அல்லது பாதிப்பையோ சுட்டிக்காட்டவில்லை.இரு தலையீடுகளும் தொற்றுக்கள் ஏற்படுவதில் சிறிதளவு அதிகரிப்புடன் சம்பந்தப்பட்டிருந்த போதிலும், இது புள்ளிவிபரரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை.பக்கவாதத்திற்கு பின்னரான வெளியீட்டங்கள் மீதான வெப்பநிலை குறைப்பு சிகிச்சையின் மருத்துவரீதியாக முக்கியத்துவமுடைய பாதிப்பு எடுத்துக்காட்டப்படவில்லை என்ற போதிலும் நிராகரிக்கப்பட முடியாதுள்ளது.ஆகவே கடுமையான பக்கவாதத்தில் வெப்பநிலை குறைப்பு சிகிச்சைகளின் பாதிப்பை மதிப்பிட பெரிய மருத்துவ சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு, தனஞ்செயன் சஞ்சயன்

Tools
Information