தீவிர சிறுநீரக பாதை தொற்றுகள் உள்ள கர்ப்பமல்லாத பெண்கள் ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை நுண்ணுயிர் கொல்லிகள் எடுத்துக் கொண்டால், இன்னொரு தொற்று ஏற்படுவதற்கு குறைவான சாத்தியம் உள்ளது.

சிறுநீரக பாதை தொற்றுக்கள் என்பது சிறுநீரக பை மற்றும் சிறுநீரகங்களின் தொற்றுகளாகும். அவை, வாந்தி, காய்ச்சல் மற்றும் அசதி, மற்றும் எப்போதாவது சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். ஒரு வருடத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேலாக சிறுநீரக பாதை தொற்றினை கொண்ட கர்ப்பமல்லாத பெண்களுக்கு ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் நுண்ணுயிர் கொல்லிகள் கொண்டு சிகிச்சையளித்தால் மேற்படி சிறுநீரக பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று இந்த திறனாய்வு கண்டது ஜீரண கோளாறுகள், தோல் அரிப்பு மற்றும் புணர்குழை எரிச்சல் ஆகியவை மிக பொதுவாக அறிக்கையிடப்படும் பக்க விளைவுகளாகும். நுண்ணுயிர் கொல்லி சிகிச்சையின் உகந்த காலஅளவை தீர்மானிக்க அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information