கடுமையான பக்கவாதத்திற்கு நப்டிட்ரோபிர்ல் மெனிட்டால் (Mannitol)

மூளைவீக்கம் என்பது பக்கவாதத்திற்குப்பின் விரைவில் மரணம் ஏற்படவும், நெடுநாள் முடமாகிப் போவதற்கும் முக்கியமானதொரு காரணமாக இருக்கிறது. (இது திடீரென மூளையின் ரத்தநாளங்களில் ஏற்படும், அடைப்பினாலோ அல்லது மூளையின் ரத்தநாளங்களிலோ அல்லது மூளைக்கு செல்லும் ரத்தநாளங்களிலோ உண்டாகும் வெடிப்பு மற்றும் ரத்தக்கசிவினால் ஏற்படுவதாகும்). மானிடோல் கரைசல் வீக்கத்தை குறைக்க, சிரை வழி தரப்படுகிறது . சிகிச்சை நிறுத்தப்பட்ட பின் மூளை வீக்கம் அதிகரிக்க (மீளுயர்வு) வாய்ப்பு உள்ளது. 226 பங்கேற்பாளர்கள் கொண்ட மூன்று மருத்துவ ஆராய்சிகள் அடங்கிய இந்த திறனாய்வு, மெனிட்டால் பக்கவாதத்திற்கு பிறகு இயலாமையைக் குறைக்கும் அல்லது உயிர் பிழைப்பதை அதிகரிக்கும் என்பதை முடிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என கண்டறிந்தது . இந்த சிகிச்சை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் மோசமான பாதக நிகழ்வுகள் எதுவும் இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகளில் அறிவிக்கப்படவில்லை. மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information