ஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களுக்கான சுய-மேலாண்மை விளக்கக் கல்வி மற்றும் முறையான மருத்துவர் மறுஆய்வு

ஆஸ்துமா கொண்ட நோயாளிகளுக்கு அவர்களின் நிலையை பற்றி விளக்கமாக கற்பிக்க பட வேண்டும், முறையான மருத்துவ மறு ஆய்வை பெற வேண்டும், உச்ச பாய்வு அல்லது அறிகுறிகள் கொண்டு அவர்களின் நிலையை வீட்டில் கண்காணித்து கொள்ள வேண்டும், மற்றும் ஒரு எழுத்திலான நடவடிக்கை திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று ஆஸ்துமா சிகிச்சை வழிகாட்டல்கள் பரிந்துரைக்கின்றன. ஆஸ்துமா சுய-மேலாண்மை விளக்கக் கல்வியை வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிட்ட சோதனைகளின் முடிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. தங்களின் ஆஸ்துமா நிலையை பற்றி விளக்கமாக கற்பிக்கப்பட்ட, முறையான மருத்துவர் மறு ஆய்விற்கு சென்ற, மற்றும் ஒரு எழுத்திலான நடவடிக்கை திட்டத்தை பயன்படுத்திய ஆஸ்துமாவால் அவதியுற்றோர், அவசரக் கால சிகிச்சை அறைக்கு வெகு சில அமர்வுகள்; சிறந்த நுரையீரல் செயல்பாடு; உச்ச மூச்சு வெளியேற்ற பாய்வில் மேம்பாடு; குறைவான அறிகுறிகள்; மற்றும் மீட்பு மருந்தின் குறைந்த பயன்பாடு ஆகியவற்றை கொண்டிருந்தனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information