கடுமையான மன நோய்கள் கொண்ட மக்களுக்கான இக்கட்டு நிலை சிகிச்சை தலையீடு

கடுமையான மன நோய்கள் (சிவியர் மெண்டல் இல்நேசஸ், எஸ்எம்ஐ) கொண்ட மக்களுக்கு, மருத்துவமனையிலிருந்து சமூகம்-சார்ந்த பராமரிப்பிற்கு மாறுதல் அச்சுறுத்தக் கூடியதாகவும் மற்றும் கடினமான அனுபவமாக இருக்கக் கூடும்.மன நல பிரச்சனைகள் கொண்ட மக்கள், குடும்பம், நண்பர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் போன்ற ஆதரவு வலைகள் இன்றி இருப்பர். அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது, தனிப்பட்ட முறையில் அவர்களை அறிந்து உதவக் கூடிய எவரும் அவர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. நிலைமைகளை மேலும் மோசமாக்க, எஸ்எம்ஐ கொண்ட மக்கள், அவர்களின் மன நலத்தில் இக்கட்டான திருப்பத்தை கொண்டு, திரும்பவும் பராமரிப்பு தேவை உருவாகி, நிலையான மற்றும் நன்றான பின் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுவர், மற்றும் ஒரு திடீர் நிகழ்வோ அல்லது இக்கட்டோ ஏற்பட்டு அவர்களின் மன நலம் மோசமடையும் போது மட்டும் மீண்டும் மருத்துவமனைக்கு செல்வர். இந்த பிரச்சனைகளுக்கு, இக்கட்டு நிலை சிகிச்சை தலையீடு மற்றும் வீட்டு பராமரிப்பு திட்டங்கள் ஒரு சாத்தியமான தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கட்டு நிலையில், சேவை பயனாளர்களுக்கு அவர்களின் வீட்டிலோ அல்லது ஒரு சமூக சூழலிலோ அளிக்கப்படும் இக்கட்டு நிலை பராமரிப்பு, வழக்கமான பராமரிப்பை விட ஒரு தகுதிவாய்ந்த, ஏற்கத்தக்க மற்றும் செலவு குறைந்த ஒரு ஆதரவு திட்டமாக இந்த திறனாய்வு கண்டது. இதற்கு மேலும், இக்கட்டு நிலை பராமரிப்பு, மருத்துவமனை மறு-அனுமதித்ததலை தவிர்த்தது ; வழக்கமான பராமரிப்பை விட சேவை பயனாளர்களின் மனநிலைமையை அதிகமாக மேம்படுத்தியது;அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மற்றும் சேவை பயனாளர்களுக்கு திருப்தி அளித்தது; மற்றும் குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு குறைவான சுமையை ஏற்படுத்தியது. இக்கட்டு நிலை சிகிச்சை தலையீட்டிற்கும் மற்றும் வழக்கமான பராமரிப்பிற்கும் இடையே இறப்பு விகிதங்களில் எந்த வித்தியாசங்களும் இல்லை.

எனினும், இந்த திறனாய்வு எட்டு ஆய்வுகளை மட்டுமே கண்டது. பெரும்பாலான இந்த ஆய்வுகளின் செயல்முறைகள் மோசமானதாக கருதப்பட்டன, மற்றும் 2006 முன் சேர்க்கப்பட்ட ஆய்வுகளுக்கு இக்கட்டு நிலை சிகிச்சை தலையீட்டிற்கு அல்லது இக்கட்டு நிலை பராமரிப்பிற்கு ஒரு தெளிவான விளக்கம் இல்லை, அதாவது ஒரு தெளிவான இக்கட்டு நிலை பராமரிப்பின் வடிவத்தின் மேல் ஒரு குறிக்கோளின்றி இருந்துள்ளது. மது அல்லது போதையின் தவறான பயன்பாடு கொண்ட சேவை பயனாளர்களையும் மற்றும் தங்களுக்கும் மற்றும் பிறருக்கும் தீங்கு ஏற்படுத்தக் கூடிய அபாயம் கொண்டவர்களையும் பெரும்பாலான ஆய்வுகள் ஒதுக்கி இருந்தன. ஒரு உறுதியான ஆதார அடித்தளத்தை உருவாக்க, அதிகமான ஆய்வுகள் தேவைப்படுகிறன என்று இந்த திறனாய்வு ஆசிரியர்கள் பரிந்துரைக்கின்றனர். தற்போது, இக்கட்டு நிலை பராமரிப்பு, திடமான மற்றும் சிறந்த தர ஆதாரமின்றி வழங்கப்படலாம். உதாரணத்திற்கு, பராமரிப்பாளர் கருத்துகள், மருந்தை எடுத்துக் கொள்வதில் சேவை பயனாளர்களின் இசைவு மற்றும் ஒப்புதல் மற்றும் சேவை பயனாளர்களால் அனுபவிக்கப்பட்ட மறுவீழ்வுகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் மேலான தரவு அல்லது தகவல் எதுவுமில்லை. முடிவாக, ஊழியர்களின் "செயல்-தீய்வு " பற்றிய அறிக்கைகள் இருந்தும், இக்கட்டு நிலை பராமரிப்பை பற்றி ஊழியர்களின் திருப்தி அளவிடப்படவில்லை.

இந்த எளிய மொழி சுருக்கம் பென் கிரே, Peer Researcher, McPin Foundation, அவர்களால் தயாரிக்கப்பட்டது. http://mcpin.org/

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information