கேன்சர் நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளைத் தடுப்பதற்கான அம்போடெரிசின் B

கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெறும் கேன்சர் நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளுக்கான அபாயம் அதிகமாக இருக்கும். அத்தகைய தொற்றுகள் உயிரை பாதிக்கக்கூடியதாகும். அத்தகைய நோயாளிகளுக்கு அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் போது, பூஞ்சை நீக்கி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. வழக்கமான அம்போடெரிசின் B-யோடு ஒப்பிடுகையில், கொழுப்பில் கரையும் அம்போடெரிசின் B சூத்திரமாக்கல் குறைவான பாதக விளைவுகளைக் (குறைவான நச்சுத்தன்மை மற்றும் ஆய்விலிருந்து விலகல்கள்) கொண்டுள்ளது என இந்த திறனாய்வு கண்டது. எனினும், உகந்த சமயங்களில் வழக்கமான அம்போடெரிசின் B-ஐ கொடுக்கும் போது, இத்தகைய கலவைகளின் நன்மைகள் இருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information