மனச்சிதைவு நோய்க்கு (Schizophrenia) கேடியாபின் (Quetiapine)

நாங்கள் மனச்சிதைவு நோய்க்கு (Schizophrenia) கேடியாபினின் (quetiapine) விளைவுகளை மருந்துப்போலி மற்றும் பிற மனக்குழப்ப நீக்கிகளோடு (antipsychotics) ஒப்பிட்டு அறியும் சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளைத் தேடினோம். நாங்கள் பத்து குறுகிய கால ஆய்வுகள் மற்றும் இரண்டு நடுத்தர கால ஆய்வுகளின் முடிவுகளை ஆய்வில் சேர்த்தோம் . கேடியாபின் மனச்சிதைவு நோய் (Schizophrenia) சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் சிகிச்சையை இரத்துசெய்தல் மற்றும் திறன் போன்றவற்றில் முதல் தலைமுறை மனக்குழப்ப நீக்கி மற்றும் ரிஸ்பெரிடோன் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடும்படியான வேறுபாடுகள் இல்லை.இதனை வழக்கமான மனக்குழப்ப நீக்கி மற்றும் ரிஸ்பெரிடோனோடு ஒப்பிடுகையில், இயக்கத்தில் கோளாறுகள் வருவதற்கு குறைவான அபாயமும், தலைச்சுற்றல், உலர்ந்த வாய் மற்றும் தூக்கம் போன்றவற்றில் அதிக அபாயமும் உள்ளன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information