கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு வின்போசடின் (Vinpocetin)

மூளையின் ஒரு இரத்த நாளத்தில் குருதியுறை காரணமாக அடைப்பு ஏற்படுவதால் மூளையின் ஒரு பகுதி போதுமான ஆக்சிஜன் பெறாமல் பக்கவாதம் ஏற்படுகிறது . இது ஒரு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிகழ்வு ஆகும். பக்கவாதம் வளர்ந்த நாடுகளில் மரணத்திற்கு மூன்றாவது முன்னணி காரணமாகவும் ,மற்றும் உயிர் பிழைத்தவர்களில் நீண்ட கால இயலாமைக்கு முக்கிய காரணமாகவும் உள்ளது. வின்கா அல்கலாய்டு என்ற மூலிகையை அடிப்படையாக கொண்டது Vinpocetine; அது மூளையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதன் மூலம் நரம்புகளை பாதுகாக்கலாம். நீண்ட கால மூளை இரத்தச் சுற்றோட்டம் கோளாறு உள்ளவர்களுக்கு vinpocetine அளித்தபின் புலனுணர்வு செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று சமவாய்ப்பிட்டு மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன . பெரும்பாலும் Vinpocetine கிழக்கு ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில், பக்கவாதம் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பக்கவாதம் அறிகுறிகள் வந்தவுடன், முதல் இரண்டு வாரத்திலே வின்போசெட்டின் அளிப்பது மரணமடையும் மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களை பார்த்துக்கொள்ளவும் தங்களுடைய அன்றாட வேலையை செய்வதற்கும் அடுத்தவர்களை சார்கிறார்களா என்று அறிய இந்த திறனாய்வு திட்டமிட்டது. ஆய்வு ஆசிரியர்கள் மருத்துவ இலக்கியத்தில் தேடி, அவர்களால் 70 பங்கேற்பாளர்கள் கொண்ட இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மட்டுமே கண்டறிந்தனர். சிகிச்சை மற்றும் மருந்துப்போலி குழுக்கள் இடையே ஒன்று மற்றும் மூன்று மாதங்களில் மரணம் மற்றும் சாருமை (dependency) விகிதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. பக்க விளைவுகள் பற்றி தகவல்கள் அளிக்கப்படவில்லை. vinpocetine கடுமையான இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாத நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இந்த ஆய்வு அளிக்கவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information