கடுமையான பக்கவாத நோயாளிகளுக்கு மருத்துவமனை பராமரிப்பின் கால அளவை குறைப்பதற்கான சேவைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

வழக்கத்தை விட முன்கூட்டியே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்ல நோயாளிகளை அனுமதிப்பதற்கும் மற்றும் அவர்களின் சொந்த வீட்டின் நன்கு பழக்கப்பட்ட சூழலில் அதிகமான புனர்வாழ்வைப் பெறுவதற்கும், முன்கூட்டிய ஆதரவளிக்கப்பட்ட மருத்துவமனை வெளியேறுதல் சேவைகள் நோக்கம் கொண்டுள்ளன. தெரபிஸ்ட்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவர்கள் கொண்ட குழுக்களால் முன்கூட்டிய ஆதரவளிக்கப்பட்ட மருத்துவமனை வெளியேறுதல் (டிஸ்சார்ஜ்) சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேவைகளைப் பெற்ற நோயாளிகள் வீட்டிற்கு முன்கூட்டியே சென்றனர் மற்றும் நீண்ட-காலக் கட்டத்திற்கு வீட்டிலேயே இருப்பதற்கு சாத்தியத்தைக் கொண்டிருந்தனர் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் சுயசார்பை மீண்டும் பெற்றனர் என்று 1957 பங்கேற்பாளர்களை கொண்டிருந்த 14 சோதனைகளை அடையாளம் கண்ட இந்த திறனாய்வு கண்டது. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வெளியேறல் குழுக்கள் மற்றும் குறைந்த கடுமையான பக்கவாதங்களைக் கொண்டிருந்த நோயாளிகளில் சிறப்பான முடிவுகள் காணப்பட்டன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.