பெரியவர்களுக்கு தோள்பட்டை எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தலையீடுகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்புலம்

கை மேல் பாகம் முடியும் இடத்தில் எலும்பு முறிவு வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான படுகாயம். பெரும்பாலும் இதை தோள்பட்டை எலும்பு முறிவு என்று அழைப்பர். கீழே விழும்போது தோள்பட்டைக்கு சற்று கீழே, பொதுவாக இந்த எலும்பு முறியும் (உடையும்). இந்த எலும்பு முறிவுகள் பெரும்பாலான அதன் மேற்புற தோல் பிய்யாமல் ஏற்படும். எலும்பு முறிவு குணமாகும் வரை தோள்பட்டை அசைவை அனுமதிக்கும் பொருட்டு காயம் அடைந்த கை ஒரு கவண்னில் (sling) அசையாமல் இருக்கும் வண்ணம் வைக்கப்படும். மேலும் கடுமையான (இடம்பெயர்ந்த) முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படும். இது பல வழிகளில் எலும்பு முறிவு துண்டுகளை ஒன்றாக பொருத்தும் முறைகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். மாற்றாக, உடைந்த எலும்பின் மேல் பகுதியை மாற்றி அமைக்கலாம் (பகுதி 'தோள்பட்டை' மாற்று: பகுதி மூட்டுச் சீரமைப்பு hemiarthroplasty) மிகவும் அரிதான நேரங்களில் மூட்டு குடைகுழி உட்பட மொத்த மூட்டும் (மொத்தம் 'தோள்பட்டை' மாற்று) மாற்றப்படுகிறது. செயல்பாட்டு திறனை மேம்படுத்த பொதுவாக இயன்முறை மருத்துவம் பயன்படுத்தப்படும்.

தேடல் முடிவுகள்

மின்னணு தரவுத்தளங்களை நவம்பர் 2014 வரை தேடி, மொத்தம் 1941 பங்கேற்பாளர்களை கொண்ட 31 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் கண்டறிந்தோம். 18 சிகிச்சை ஒப்பீடுகளில் பலவற்றை ஒரு ஆய்வு மட்டுமே சோதனை செய்தது. சிறந்த சான்றுகள் எட்டு ஆய்வுகளில் இருந்து பெறப்பட்டன, அதில் ஒன்று ஒப்பீட்டளவில் ஒரு பெரிய பல-மையம் (multicentre) ஆய்வு; இந்த ஆய்வுகள் இடம்பெயர்ந்த எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகள் அறுவை சிகிச்சையை விட சிறந்த பயன் அளிக்குமா என்று சோதித்தன.

முக்கிய முடிவுகள்

வழக்கமாக கடுமையாக இல்லாத எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகளின் திறனை 9 ஆய்வுகள் மதிப்பிடு செய்தன. மற்ற வகை கட்டு கட்டுவதை விட கை கவண் (sling) முறை பொதுவாக வசதியாக இருந்தது என்று ஒரு ஆய்வு கண்டறிந்தது. இடம்பெயரா எலும்பு முறிவுகள் உள்ளவர்களுக்கு, தாமத மூட்டசைவு (மூன்று வாரங்களுக்கு பின்)டன் ஒப்பிடும்போது விரைவாக மூட்டசைவு (ஒரு வாரத்திற்குள்) செய்தவர்களுக்கு விரைவாக நலம் பெறுதல் மற்றும் குறைவாக வலி உணர்தல் போன்றவை இருந்ததற்கான சில ஆதாரங்கள் உள்ளன. தாங்களே உடற்பயிற்சி செய்ய போதுமான அறிவுரை கொடுத்தால் நோயாளிகள் பொதுவாக திருப்திகரமான விளைவுபயன் அடைவதற்கான வாய்ப்பு உள்ளதாக வலுவற்ற ஆதாரத்தை இரண்டு ஆராய்ச்சிகள் வழங்கின.

567 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட, எட்டு ஆய்வுகள் இடம்பெயர்ந்த முறிவுகளுடன் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சையுடன் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகளை ஒப்பிட்டன. சமீபத்திய ஐந்து ஆய்வுகளில் ஒன்று திரட்டப்பட்ட முடிவுகள் இந்த இரு அணுகுமுறைகளுக்கும் இடையே செயல்பாட்டு திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை நோயாளிகளே -தெரிவிக்கும் அளவீடுகள் முலம் 6, 12 மற்றும் 24 மாதங்களில் அளக்கும் பொது எந்த ஒரு முக்கியமான வேறுபாடுகளும் இல்லை எனக் காண்பித்தன. இறப்பு விகிதத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே மிக சிறிய வேறுபாடுதான் இருந்தது. பல அறுவை சிகிச்சை குழு நோயாளிகள் கூடுதல் அல்லது இரண்டாவது முறை அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அறுவை சிகிச்சை குழுவில் இருந்த பெரும்பான்மையான பங்கேற்பாளருக்கு பாதகமான நிகழ்வு ஏற்பட்டது.

பல விதமான அறுவை சிகிச்சை முறைகளை சோதித்த பன்னிரண்டு ஆய்வுகளை (744 பங்கேற்பாளர்கள்) கண்டறிந்தோம். சில தலையீடுகளுக்கு இடையே சில வேறுபாடுகள் இருந்தது என்பதற்கு வலுவற்ற ஆதாரம் உள்ளது (எ.கா பல்வேறு சாதனங்கள் அல்லது சாதனங்களை பல்வேறு வழிகளில் பயன்படுத்தல்).

பகுதி மூட்டுச் சீரமைப்பு (hemiarthroplasty) அல்லது அறுவை சிகிச்சை பொருத்துதலுக்கு பின்னர், உடனடி அல்லது சிறிது காலம் கழித்து மூட்டசைவு செய்தல், ஒரேமாதிரியான பயனை அளிக்கும் என்பதற்கு மிகவும் குறைந்த ஆதாரங்கள் உள்ளன.

சான்றின் தரம்

31 ஆய்வுகளும் பொதுவாக அவற்றின் முடிவுகளின் நம்பகத்தன்மையை குறைக்கக் கூடிய அம்சங்களைக் கொண்டிருந்தன. அறுவை சிகிச்சையுடன் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகளை ஒப்பிட்டு செய்த ஆய்வுகளின் முடிவுகளை நாங்கள் ஆதா ரத்தில் உயர்ந்ததாக அல்லது மிதமான தரமாக இருந்தது என்று கருதினோம்.அதாவது இந்த முடிவுகளின் நம்பகத்தன்மை பற்றி உறுதியாக உள்ளோம். மற்ற ஒப்பீடுகளின், சான்றின் தரத்தை "குறைவு" அல்லது " மிக குறைவு" என்று மதிப்பிட்டோம், அப்படி என்றால் எங்களுக்கு இந்த முடிவகளின் மிது நம்பகத்தன்மை குறைவு.

முடிவுரைகள்

அண்மைப் பகுதி மேற்கையின் நீண்ட எலும்பு (proximal humeral) முறிவுகள் உள்ள பெரும்பாலானவர்களுக்கு அறுவை சிகிச்சை மேலான விளைவுபயனை அளிக்காது மேலும் அதை தொடர்து மேலும் அறுவை சிகிச்சை தேவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். வேறுவிதமாக சொல்லவேண்டும் என்றால் இந்த மாதிரியான எலும்பு முறிவுகளுக்கு எது சிறந்த அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறை அல்லது அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது எது சிறந்தது என்று தீர்மானிக்க போதுமான ஆதாரம் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு