கடுமையான பக்கவாதிற்கு நைட்ரிக் ஆக்ஸைடு கொடைகள் (நைட்ரேட்டுகள்), L- அர்ஜினைன் அல்லது நைட்ரிக் ஆக்சைடு தொகுத்தாக்கவூக்கி மறிப்பிகள் (Nitric oxide donors (nitrates), L-arginine, or nitric oxide synthase inhibitors for acute stroke)

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

கடுமையான பக்கவாத நோயாளிகளிகளுக்கு கிளிசெரயில் ட்ரைநைட்ரேட் (GTN)கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும். மூளை செயல்பாட்டை பக்கவாதம் நிகழும்போதும் அதற்கு முன்னும் கட்டுப்படுத்தல் மற்றும்இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தலில் நைட்ரிக் ஆக்ஸைடு மூலக்கூறு முக்கிய செயலாற்றுகிறது .அதனால் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி மற்றும் அதனை கட்டுப்படுத்தகூடிய மருந்துகள் கடுமையான பக்கவாதத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் . 127 கடுமையான பக்கவாத நோயாளிகளில் , கிளிசெரயில் ட்ரைநைட்ரேட் மற்றும் ஒரு நைட்ரிக் ஆக்சைடு கொடை கொண்டு செய்த இரண்டு சிறிய ஆய்வுகள் நிறைவுபெற்றுள்ளது. அது இரத்த அழுத்தத்தை குறைக்க வல்லது என்று காண்பித்தது. எனினும், GTN ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்து என்று மதிப்பிட இந்த சிறிய ஆராய்ச்சிகள் போதாது. மேலும் இந்த கேள்விகளுக்கு விடை அளிக்கவல்ல ஒரு பெரிய ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நைட்ரிக் ஆக்சைடு கொடை அல்லது பண்பேற்றம் மருந்துகள் கொண்டு செய்யபட்ட ஆய்வுகள் எதுவும் இல்லை. தற்போது, இந்த வகை மருந்துகளை கடுமையான பக்கவாதத்திற்கான வழக்கமான மேலாண்மைக்கு பயன்படுத்த கூடாது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு