மாத விடாய் நிற்றலுக்கு பிந்தைய எலும்புப்புரை வராமல் தடுத்தல் மற்றும் சிகிச்சைக்கான உடற்பயிற்சிகள்

இந்த காக்ரேன் திறனாய்வு மாத விடாய் நிறுத்தத்திற்கு பின் பெண்களுக்கு உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் எலும்பு அடர்த்தி விளைவுகளை விளக்குகிறது.

கீழ்வரும் விளைவுகள் இந்த திறனாய்வில் கண்டறியப்பட்டது

-        உடற்பயிற்சிகள் எலும்பு அடர்த்தியை சற்றே உயர்த்துகிறது

-        உடற்பயிற்சிகள் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை சற்று குறைக்கின்றன


இந்த முடிவுகள் எதேச்சையாக நடந்திருக்கக் கூடும்.

எலும்புப்புரை மற்றும் உடற்பயிற்சி என்றால் என்ன

எலும்பு ஒரு உயிருள்ள, வளரும் உடல் உறுப்பு. வாழ்வின் அனைத்து காலகட்டங்களிலும் எலும்பின் புதிய உயிரணுக்கள் உருவாவதும், பழைய உயிரணுக்கள் அழிவதும் வலுவான எலும்பை உருவாக்க உதவுகின்றன. எலும்பின் புதிய உயிரணுக்கள் உருவாகும் வேகத்தை விட அழிதல் அதிகமாகும் பொழுது, எலும்புபுரை உண்டாகிறது. அப்போது எலும்பில் உள்ள கால்சியம் (calcium சுண்ணாம்பு சத்து) போன்ற தாது பொருட்கள் குறைகிறது. அது எலும்புகளை பலவீனமாக ஆக்குவதுடன், ஒரு சிறிய மோதல் அல்லது வீழ்ச்சி போன்ற சிறு காயங்களினால்கூட எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

எலும்பு புரை உள்ளவர்களுக்கு தசை வலுவாக்கும் பயிற்சிகள், தாய் சீ, ஏரோபிக், நடப்பது போன்ற எலும்பின் மீதான அழுத்தம் அல்லது கனத்தை அதிகரிக்கும் பயிற்சிகள் (எலும்புகள் உடல் எடையைத் தாங்கும் பொழுது அல்லது எடையைப் பயன்படுத்தலால் இயக்கம் முடங்கும் பொழுது ) பரிந்துரை செய்யப்படுகின்றன.

பெண்கள் மாத விடாய் நிற்றலுக்கு பின்னும் உடற்பயிற்சிகள் செய்வதால் விளையும் பயன்கள்.

முதுகு தண்டின் எலும்பு தாது அடர்த்தி

உடற்பயிற்சி செய்தவர்களுக்கு உடற்பயிற்சி செய்யாதவர்களை விட எலும்பு அழிவு சராசரியாக 0.85 % குறைந்து காணப்பட்டது.

பலவகை பயிற்சிகளை கலந்து செய்தவர்களுக்கு பயிற்சி செய்யாதவர்களை விட எலும்பு அழிவு சராசரியாக 3.2% குறைந்து காணப்பட்டது.

இடுப்பின் எலும்பு தாது அடர்த்தி

உடற்பயிற்சி செய்தவர்களுக்கு செய்யாதவர்களை விட சராசரியாக 1.03% எலும்பு அழிவு குறைந்து காணப்பட்டது

தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்தவர்களுக்கு எலும்பு அழிவு சராசரியாக1.03% குறைவு

எலும்பு முறிவுகள்

உடற்பயிற்சி செய்த 100 பேரில் 4 பேருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. (முழுமையான வேறுபாடு 4%).

பயிற்சி செய்தவர்களில் 100க்கு 7 பெண்களுக்கு மட்டுமே எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

பயிற்சி செய்யாதவர்களில் 100-க்கு 11 பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இர. இரவி மாற்றம் சி.இ.பி.என்.அர். குழு

Tools
Information