கடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு பெண்டோக்ஸிபிலைன், ப்ரோபெண்டோபிலைன் மற்றும் பெண்டிபிலைன் (Pentoxifylline, propentofylline and pentifylline)

மூளையின் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யக் கூடிய மெத்தில்சேன்தென்ஸ் (Methylxanthines) மருந்துகள், இரத்த கட்டிகளால் ஏற்படுகின்ற பக்கவாதத்திற்கான ஆரம்பநிலை சிகிச்சைக்கு எந்த நன்மையையும் விளைவிப்பதில்லை . மெத்தில்சாந்தைன்ஸ் (Methylxanthines) மூளை இரத்த ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் ஆனால் அதனால் நோயாளியின் மீட்பு மேம்படுமா என்று எங்களுக்கு தெரியவில்லை. எந்த ஒரு தெளிவான பயனும் தெரிவிக்காத 5 சிறிய ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். கடுமையான பக்கவாதத்திற்கு மெத்தில்சேன்தென்ஸ் (methylxanthines) பயன்படுத்துவதை தற்போது பரிந்துரைக்க இயலாது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information