நஞ்சு திறக்குறை (placental insufficiency) உள்ளது (டாப்ளர் சோதனை மூலம் கண்டறியப்பட்டது) என்று ஐயப்படுபவர்களுக்கு மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (TENS)

நஞ்சு திறக்குறை (placental insufficiency) உள்ளவர்கள் என்று ஐயத்திற்குரிய கர்ப்பிணி பெண்களுக்கு, மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (TENS) கருக்குடை இடையே இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து தாயிடம் இருந்து சரிவர கிடைக்காத குழந்தைகள் இந்த நிலைமையை ஈடு செய்யும் பொருட்டு குருதிக்குழல்களில் சில மாற்றங்கள் செய்வதால், நஞ்சு திறக்குறை (placental insufficiency) ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு, தொப்புள் கொடி, கருப்பை இடையே இரத்த ஓட்டம் உள்ளதைக் கண்டறிய டாப்ளர் செவியுணரா ஒலி (அல்ட்ராசவுண்ட்) ஒலி அலைகளைப் பயன்படுத்துகிறது. மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (TENS) ஒரு ஊடுறுவு அல்ல சிகிச்சை முறை. இதில் தோல் மேல் பொருத்தப்பட்ட மின்முனை முலம் மின் தூண்டுதல் அளிக்கப்படும். மூலம் மின் தூண்டுதல் அளிக்கப்படுகிறது . மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (TENS) குழந்தைக்கும், கருக்குடை, கருப்பைக்கும் இடையே நஞ்சு திறக்குறை (placental insufficiency) உள்ளவர்கள் என்று டாப்ளர் செவியுணரா ஒலி (அல்ட்ராசவுண்ட்) கொண்டு நோயறிதல் செய்தவர்களுக்கு, இரத்த ஓட்டத்தை அதிகபடுத்தும் என்பதற்கு இந்த திறனாய்வு எந்த ஆதாரங்களையும் கண்டறியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:ரேஷ்மா மற்றும் சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information