முன்-பேறுகால வலிப்பு கொண்ட பெண்களுக்கான மெக்னீசியம் ஸல்பேட் மற்றும் பிற வலிப்பு மருந்துகள்

முன்-பேறுகால வலிப்பு (இரத்தநச்சு) கொண்ட பெண்களில் வலிப்பு நோயை தடுக்க மெக்னீசியம் ஸல்பேட் உதவும்.

கர்ப்பக் காலத்தின் போது, சில பெண்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிகப்படியான புரத அளவுகளை கொண்டிருப்பர் (முன்-பேறுகால வலிப்பு அல்லது இரத்தநச்சு). முன்-பேறுகால வலிப்பு கொண்ட பெரும்பாலான பெண்கள் எந்த பிரச்சனைகளும் இன்றி பிள்ளை பெறுவர். எனினும், கடுமையான முன்-பேறுகால வலிப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு மற்றும் இரத்தக்கட்டிகள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும். வெகு சில பெண்கள் வலிப்புகளை கொண்டிருக்க கூடும். இத்தகைய பிரச்னைகள், குழந்தைகள் சீக்கிரம் பிறப்பதற்கும் மற்றும் வெகு சிறிதாக பிறப்பதற்கும் வழிவகுக்கும். ஒரு பெண்ணுக்கு முன்-பேறுகால வலிப்பு இருந்தால், அவளும் அவளது குழந்தையும் இறப்பதற்கான அதிக அபாயத்தைக் கொண்டிருக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர- வருமான நாடுகளில் முன்-பேறுகால வலிப்பு மிகவும் பொதுவாக காணப்படுகிறது.

மெக்னீசியம் ஸல்பேட் , முன்-பேறுகால வலிப்பு கொண்ட பெண்களின் எண்ணிக்கையை குறைத்தது எனவும் ஆனால், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவில்லை எனவும் 15 ஆய்வுகளின் இந்த திறனாய்வு காட்டியது. மெக்னீசியம் ஸல்பேட் கர்ப்பிணி பெண்களில் உடல் வெப்பமடைதல் (பிளஸ்சிங்) என்ற பக்க விளைவை கொண்டிருந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பின்-தொடர் கண்காணிப்பில் வேறு பாதகமான விளைவுகள் காணப்படவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information