போட்காஸ்ட்: ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு

காக்ரேன் மஸ்குலோஸ்கேலிடல் குழு, ஃபைப்ரோமியால்ஜியா  என்ற ஒரு வலிமிகுந்த நிலைமையை கொண்டிருக்கும் மக்களுக்கான உடற்பயிற்சி திட்டங்களின் மீது ஒரு தொடர்ச்சியான திறனாய்வுகளை தயாரிக்கின்றன. அவற்றில் மிக சமீபமானது அக்டோபர் 2014-ல் வெளியிடப்பட்டது மற்றும் இது நீர்-சார்ந்த உடற்பயிற்சியின் ஆதாரத்தை ஆய்வு செய்தது. இந்த ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான உடற்பயிற்சியின் திறனாய்வு குழுவிலிருந்து தெரேசா ரோஸ், இந்த நிலைமை மற்றும் இந்த சிகிச்சை வகையையும் பற்றி இந்த ஆதார வலையொலியில் நமக்கு விளக்குகிறார்.